சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபையுடன் வருகிறார் அமைச்சர் ஹக்கீம்

எம்.வை.அமீர் -

சாய்ந்தமருது மக்களால் முன்வைக்கப்பட்ட, சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபையை விரைவில் பெற்றுத் தருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாக்குறுதியளித்திருந்தது. அதன் பிரகாரம் கடந்த தேர்தலுக்கு முன்னரும் சாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாசல் தலைமை உள்ளிட்ட குழுவினரை அப்போதைய மாகாணசபைகள் உள்ளுராட்சி அமைச்சரிடம் அழைத்துச்சென்று குறித்த மக்களின் நியாயங்கள் முன்வைக்கப்பட்டு உத்தரவாதமும் பெறப்பட்டது.

கடந்த தேர்தல் பிரச்சார வேளையிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையினாலும் சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் வாக்குறுதியளிக்கப்பட்டது.

சாய்ந்தமருது மக்களின் உள்ளுராட்சிசபை கோரிக்கையை விரைவு படுத்தி நிறைவேற்றிக் கொடுப்பதற்காக 2015-10-01 அன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்கள் தலைமையில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர்,எம்.ஐ.எம்.பிர்தௌஸ் மற்றும் ஏ.நஸார்டீன் உள்ளிட்ட குழுவினர் மாகாணசபைகள் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களை சந்தித்து சாய்ந்தமருது மக்களின் உள்ளுராட்சிசபைக் கோரிக்கை தொடர்பாக விளக்கிக் கூறியதன் பயனாக உடனடியாக குறித்த கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக புதிய அமைச்சர் வாக்குறுதியளித்துள்ளதாக குழுவில் சென்றிருந்த கல்முனை மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான ஏ.ஏ.பஷீர் இம்போட்மிரர் செய்திச்சேவைக்குத் தெரிவித்தார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -