முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டார் கல்முனை மாநகர சபையின் UNP உறுப்பினர் நபார்



தென்கிழக்கு பலகலைக் கழக விளையாட்டுப் பேரவையின் தலைவரும், தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் பேரவைத் தலைவரும், இந்நாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும், ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை இணைப்பாளரும், அம்பாறை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் இளைஞர் அமைப்பாளருமான AHHM நபார் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயற்படப்போவதாக இம்போட்மிரர் செய்திப்பிரிவுக்குத் தெரிவித்தார்.

இது சம்மந்தமாக அவர் தொடர்ந்தும் இம்போட்மிரருக்குக் கருத்துத் தெரிவிக்கையில்:
 சமூகத்தை சரியான வழிக்கு இட்டுச்செல்ல வேண்டியது ஒவ்வொரு இளைஞர்களின் முக்கிய கடமையாகவிருக்கிறது. பணத்துக்கு சோரம் போய் சமூகத்தைக் காட்டிக்கொடுக்க முடியாது. எனவே சரியான வழியில் சென்று மக்களுக்கான அபிலாசைகளை வென்றெடுக்க நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கரத்தைப் பலப்படுத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தற்பொழுது வெளிநாட்டில் இருக்கிறார் அவர் வந்ததும் என் ஆதரவாளர்கள், என் நண்பர்கள் கிழக்கில் உள்ள இளைஞர் அணியினர் என பல ஆயிரம் பெரியவர்கள் மற்றும் என் தோழர்கள் இளைஞர்கள் சகிதம் கட்சியில் இணைந்து இன்றைய இளைஞர்களுக்காக சிறந்த அரசியல் கலாச்சாரத்தைக் கட்டிக்காக்க முன்வந்துள்ளேன் என்றும் இம்போட்மிரர் செய்திப்பிரிவுக்கு நபார் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -