இலக்கம் 14 , நாவல, ராஜகிரியவில் அசாத் சாலி அவர்கள் தங்கியுள்ள வீடு குறிப்பிட்ட சில நபர்களால் முற்றுகையிடபட்டுள்ளதாக அங்கிருந்து வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அசாத் சாலி கடந்த சில வாரங்களாக ஒருவரை பலவந்தமாக பிடித்து வைத்துள்ளதாகவும், அவரின் உறவினர்களுக்கு இன்று கிடைத்த தகவலின் படி இந்த வீட்டில் தங்கி இருப்பதாக தெரிவித்ததை அடுத்து பொலிசாருக்கு அறிவிப்பு செய்துவிட்டு தாங்கள் குறித்த மீட்பு நடவடிக்கையில் இறங்கியதாகவும் தெரிவித்தார்.
தற்போது ராஜகிரிய போலீசில் சட்டவிரோத தடுத்துவைப்பு தொடர்பில் அசாத்சாலிக்கு எதிராக முறைப்பாடு செய்யபட்டும் அவர் இதுவரை வீட்டில் இருந்து வெளியேறவில்லை எனவும், அதேவேளை அங்கு களத்தில் ஹிரு, சிரச, சுவர்ணவாகினி உட்பட தொலைக்காட்சி நிருபர்கள் அங்கு செய்தி சேகரித்து வருவதாகவும், அசாத்சாலியின் குடும்பத்தினரும் அங்கு வருகை தந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.CM
