அஷ்ரப் பற்றி அழுதவாறு உருக்கமான உரை நிகழ்த்தினார் அமைச்சர் ஹக்கீம்!

லண்டனிலிருந்து மீரா அலி ரஜாய்-

மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் 15 வருட நினைவு தினம் ஐக்கிய இராச்சிய லண்டன் மில்டன் கின்ஸ் நகரில் இடம்பெற்றது .

"தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் தலைமைத்துவ வழிகாட்டலும் அது கற்றுத்தந்த பாடங்களும் " என்கின்ற தொனிப்பொருளில் இந்நிகழ்வு இடம்பெற்றது .

இந் நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்தின் பல பகுதிகளிலிருந்தும் பலர் கலந்து கொண்டிருந்தனர் .

இந் நிகழ்வுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் , நகர அபிவிருத்தி , நீர் வளங்கள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பெருந் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் பற்றி கண்கள் கசிந்தவாறு உருக்கமான ஒரு உரையை நிகழ்த்தி இருந்தார் .

இந் நிகழ்வில் விசேட அதிதிகளாக வைத்திய நிபுனர் எம். ரயீஸ் , கல்முனையைச் சேர்ந்த வைத்தியர் ரிசான் ஜெமீல் , ஊடகவியலாளர் இர்பான் இக்பால் , சட்டத்தரணி சமீம் , ஆகியோரும் கலந்து கொண்டனர் .




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -