நடிகை சரண்யா மோகன் பல் டாக்டரை மணந்தார்..!

வெண்ணிலா கபடிக்குழு, ‘ஈரம்’, ‘வேலாயுதம்’, ‘யாரடி நீ மோகினி’ ஆகிய படங்களில் நடித்தவர், சரண்யா மோகன். இவர் கேரளாவை சேர்ந்தவர். மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்து இருக்கிறார். 

இவருக்கும், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பல் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இரண்டு பேரின் குடும்பத்தினரும் கலந்து பேசி, இந்த திருமணத்தை நிச்சயம் செய்தார்கள். அதன்படி, சரண்யா மோகன்-அரவிந்த் கிருஷ்ணன் திருமணம் நேற்று காலை ஆலப்புழாவில் நடந்தது. 

திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணத்துக்கு பின், சரண்யா மோகன் சினிமா உலகை விட்டு விலகுகிறார். 

‘‘இனிமேல் நான் நடிக்கமாட்டேன். நடனப்பள்ளி தொடங்கி நடத்துவேன்’’, என்று அவர் கூறினார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -