இங்கிலாந்து அணியின் விக்கட் காப்பாளர் ஜோஸ் பட்லருக்கு அவுஸ்ரேலிய அணியுடனான இறுதி மூன்று ஒருநாள் போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இவருக்கு பதிலாக ஜெனி பேர்ஸ்டோவ் விக்கட்காப்பாளராக அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்ரேலிய அணியுடனான முதல் இரண்டு போட்டிகளிலும் ஜொஸ் பட்லர் சிறப்பாக செயற்படவில்லை.
இதன் காரணமாக அவருக்கு ஓய்வு என்பது அவசியம் வழங்கப்பட வேண்டிய நிலைய ஏற்பட்டது என அணியின் பயிற்றுவிப்பாளர் ட்ரேவர் பேலிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, நாளைய தினம் ரெப்பர்ட்டில் இடம்பெறவுள்ளது.
ஐந்து போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றிப்பெற்றுள்ள அலுவுஸ்ரேலிய அணி தொடரில் 2க்கு பூச்சியம் என்று முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
