எம்.ஜே.எம்.சஜீத்-
அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய கரையோர கடற்பிரதேசங்களை சுத்தம் செய்யும் வேலை திட்டத்துக்கு அமைவாக இன்று அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கரையோர பிரதேசங்கள் அனைத்தும் துப்பரவு செய்யும் பணி அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் நடை பெற்றது.
இப்பணியானது கிராம அபிவிருத்தி சங்கம், மகளிர் கிராம அபிவிருத்தி சங்கம், தேசிய கல்விக்கல்லூரியின் ஆசிரிய பயிலுனர்கள், பாடசாலை மாணவர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், உட்பட அரச உத்தியோகத்தர்களின் பங்கு பற்றுதலுடன் இப்பணி ஆரம்பமானது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் டி.ஜே.அதிசயராஜ், அக்கறைப்பற்று பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி இப்றாகிம், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைதுவ உதவி பணிப்பாளர் ஏ.எஸ்.சமட் உட்பட உயர் அதிகாரிகளும், கல்விமான்களும் கலந்து கொண்டனர்.







