பழுலுல்லாஹ் பர்ஹான்-
காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாடு செய்துள்ள புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை எதிர்வரும் 24-09-2015 வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு காத்தான்குடி அன்வர்பள்ளி கடற்கரைத் திடலில் நடைபெறவுள்ளதாக காத்தான்குடி இஸ்லாமிக் சென்றரின் செயலாளர் ஏ.என்.எம்.மிஹ்ழார் தெரிவித்தார்.
இத் திடல் தொழுகையில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையும் நடாத்தி குத்பாப் பிரசங்கத்தையும் அஷ்ஷெய்க். எஸ்.எல்.எம்.நஷ்மல் (பலாஹி) நிகழ்த்தவுள்ளார்.
இதில் அனைத்து சகோதர ,சகோதரிகளையும் கலந்து கொண்டு புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுமாறு காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் வேண்டுகோள் விடுக்கின்றது.
காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா ஏற்பாடு செய்துள்ள புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை எதிர்வரும் 24-09-2015 வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரை முன்றலில் நடைபெறவுள்ளதாக தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ. ரவூப் தெரிவித்தார்.
இங்கு பெருநாள் தொழுகையை நடைபெறவுள்ளதோடு பெருநாள் குத்பாப் பிரசங்கத்தை பிரபல தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் கோவை எஸ். அய்யூப் நிகழ்த்தவுள்ளார்.
இதில் அனைத்து சகோதர ,சகோதரிகளையும் கலந்து கொண்டு புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுமாறு காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா வேண்டுகோள் விடுக்கின்றது.
புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு காத்தான்குடி மீடியா போரத்தின் பெருநாள் ஒன்று கூடல் எதிர்வரும் 26.09.2015 சனிக்கிழமை இரவு 8 .30 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை முழு நிலவில் காத்தான்குடி கடற்கரையிலுள்ள மும்தாஸ் மௌலவியின் வளவில்; இடம்பெறவுள்ளதாக மீடியா போரத்தின் தலைவர் ஏ.எல்.டீன் பைரூஸ் தெரிவித்தார்.
காத்தான்குடி மீடியோ போரத்தின் நிருவாகத்தில் அங்கம் வகிக்கும் சிரேஷ்ட மற்றும் கணிஷ்ட ஊடகவியலாளர்கள் ,நிருவாக உறுப்பினர்கள்,பொதுச் சபை அங்கத்தர்கள் மாத்திரம் கலந்து கொள்ளும் இவ் ஒன்று கூடலில் அவர்களின் திறமைகளை வெளிக் கொணரும் வகையில் பல்வேறு கலை ,கலாசார நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.
மேற்படி பெருநாள் ஒன்று கூடலில் பங்குபெற்றும் மீடியோ போரத்தின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.
பிரச்சினைகளையும், தேவைகளையும் முன்கொண்டு செல்லும் ஊடக உறவுகளை புரிந்துணர்வுடன் கட்டியெழுப்பி சிறந்ததொரு ஆளுமையுள்ள ஊடகவியலாளராக மாற்றுவதை நோக்கமாக கொண்டே இவ் ஒன்று கூடல் இடம்பெறவுள்ளதாக மீடியோ போரத்தின் தலைவர் ஏ.எல்.டீன் பைரூஸ் மேலும் தெரிவித்தார்.


