கிழக்கு மாகாண சபையில் உறுப்பினர் உதுமாலெப்பையினால் தனிநபர் பிரேரனை..!

சலீம் றமீஸ்-
கிழக்கு மாகாண சபையின் ஐந்து அமைச்சுக்களின் ஆலோசனைக் குழுக்களை மீள அமைத்து வினைத்திறனுடன் செயல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி கிழக்கு மாகாண சபையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் தனிநபர் பிரேரனை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் ஐந்து அமைச்சுக்களின் ஆலோசனைக்குழுக்கள் இயங்காமல் இருப்பதனால் அண்மைக்காலமாக கிழக்கு மாகாண அமைச்சுக்களின் நடவடிக்கை தொடர்பாக பகிரங்கமாகவே ஆளும் கட்சி மாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களினால் தெரிவிக்கப்படும் கருத்துக்களால் நமது கிழக்கு மாகாணத்தில் அர்ப்பணிப்புடன் வளர்த்தெடுக்கப்பட்ட இன உறவுகள் பாதிக்கப்படும் நிலை உருவாகுவதுடன், சமூகங்களுக்கிடையே விரிசல்களும் ஏற்படுத்தப்பட்டு இருப்பதனால் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் ஆலோசனைக் குழுக்களை மீள அமைத்து வினைத்திறனுடன் செயல்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்து இன்று  22ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் தனிநபர் பிரேரனை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -