தேசிய அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவையின் சில அமைச்சுப் பதவிகள், நட்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ளதாக ஜே வி பி தெரிவித்துள்ளது.
ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி இதனைத் தெரிவித்துள்ளார்.
சிலரின் மனம் கோணாதிருக்கும் பொருட்டு இவ்வாறான அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மக்களின் தேவைக்கு ஏற்பவே அமைச்சரவை உருவாக்கப்பட வேண்டும்.
ஆனால் தேவையற்ற வகையிலும், சிலரை பகைத்துக் கொள்ளக் கூடாது என்றும், தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் சில அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.