காரைதீவில் ஹஜ்ஜுப் பெருநாள் சங்கமப் பெருவிழா..!

சப்னி,றிஸ்லி-
ம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர்கள் மேம்பாட்டுப் பேரவையின் பிரதம செயற்பாட்டாளர் தேசமாண்ய.ஜலீல் ஜீ யின் தலைமையில் மிக விமர்சையாக ஹஜ்ஜுப் பெருநாள் சங்கமப் பெரு விழா காரைதீவு பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மூன்று அரங்குகளாக நடைபெற்ற சங்கமப் பெருவிழாவில் தமிழ்-முஸ்லீம் , இந்து-இஸ்லாமிய உணர்வுகள் சங்கமிக்கின்ற களமாக; இன ஐக்கியத்தி7ன் வெளிப்பாடாக இவ்விலக்கிய பெருவிழா திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாவது உரையரங்கில்- கலாபூஷணம்.அஷ்-ஷெய்க், அல்- குத்ப் , அப்துல் மஜீட் மக்கத்தார் (றஹ்) -காதிரி -ஜிஷ்தி றிபாய் , நக்ஷபந்தி அவர்கள் பிரதம அதிதியாகவும் , விழாவின் அதி கௌரவ அதிதியாக: மௌலவி சபா முஹம்மட் ஆலிம் (நஜாஹி) அவர்களும், விஷேட அதிதிகளாக : தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் செல்வி.அனுஷ்ஸியா சேனாதிராஜா, சிரேஷ்ட ஊடகவியலாளர். விபுலமாமணி வீ.ரீ.சகா தேவராஜா மற்றும் ச‌மாதானத்துக்கான சமயங்களின் இலங்கைப் பேரவையின் அம்பாறை மாவட்ட தலைவர் - டாக்டர். எம்.ஐ.எம். ஜெமீல் ஆகியோர் ஹஜ் மகிழ்வுரை நிகழ்த்தினர்.

இரண்டாம் அங்கமான "மான்புறும் ஹஜ்ஜுப் பெருநாளின் மகிமை கூறும் கவியர‌ங்கு" இதில் கலாபூஷணம். கோயிலூர் தனிகாசலம், கவிஞ்ஞர் புட்கரன், கலாபூஷணம் -அக்கரைப் பாக்கியன், கலாபூஷணம்- கவிப்புணல் கே.எம்.ஏ.அஸீஸ் மற்றும் கவிதாயினிகலான கல்முனை ஜுல்பிகா ஸரீப்- கலைமகள் ஹிதாயா றிஸ்வி ஆகியோர் கவி மழையில் நனைய வைத்தனர். 

இறுதி அங்கமாக கௌரவிப்பு அரங்கில்-சிறப்பு உரை நிகழ்த்தியோருக்கும் சிறப்புக் கவியரங்கில் கலந்து கொண்டோருக்கும் "மேம்பாட்டு விருது-2015" வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

நிகழ்வின் இறுதியில் வீரமுனை ஸிஸிலியாவினால் இன ஐக்கியத்தின் மேன்மை கூறும் மெல்லிசைப் பாடல் இசைக்கப்பட்டதுடன் இஸ்லாமிய கலாசார தீன்பண்டங்க‌ளும் உபசரிக்கப்பட்டு பெருநாள் பொதியும் வழங்கி வைக்கப்பட்ட்மை விசேட அம்சமாகும்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -