அட்டாளைச்சேனையில் சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்..!

பைஷல் இஸ்மாயில் –
ர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பிரதேச இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டிலும் பிரதேச சிறுவர்பாதுகாப்புப் பிரிவின் அனுசரணையுடனும் 'பிள்ளைகளை உயிர்போல் காப்போம்' என்ற தொனிப்பொருளில் சிறுவர்பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் இன்று புதன்கிழமை (30) அட்டாளைச்சேனையில் நடைபெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் யூ.எல்.எம்.சபீர் தலைமையில் இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா மற்றும் உதவிச் செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், இளைஞர் கழக சம்மேளனத்தின் செயலாளர் எம்.எம்.நாஸர் அலி, உபசெயலாளர் எம்.சாஜின், அமைப்பாளர் எம்.எஸ்.ஜெனீஸ் மற்றும் எம்.எம்.சித்தி நாழிறா உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றிருந்தனர்.

இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் சிறுவர்களின் பாதுகாப்பு விடயம் தொடர்பிலும், போதைப்பொருள் பாவனைமற்றும் சமூக விரோதச் செயற்பாடுககளிலிருந்து அவர்களை தடுப்பதற்கான செயற்பாடுகள் பற்றிய துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வுட்டப்பட்டது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -