மருதமுனை றகுமான் ஏ ஜமீலின் "தாளில் பறக்கும் தும்பி " கவிதை நூல் வெளியீட்டு விழா..!

பி.எம்.எம்.ஏ.காதர்-

ருதமுனை றகுமான் ஏ ஜமீல் எழுதிய கவிதைகளின் தொகுப்பான 'தாளில் பறக்கும் தும்பி' கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 2015.09.12ம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் மர்ஹூம் மருதூர் கொத்தன் நினைவரங்கில் நடைபெறவுள்ளது.

உதவிக் கல்விப் பணிப்பாளர் சத்தார் எம் பிர்தௌஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில் அதிதிகளாக பொறியிலாளர் அப்துர் ரஹ்மான்,சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 

நூல் பற்றிய கருத்துரைகளை கவிதாயினி மண்டூர் உருத்ரா, விமர்சகர் சிராஜ் மஸ்ஹூர், கதைஞர் திசேரா ஆகியோர் வழங்கவுள்ளனர். நூலின் முதன்மை பிரதிகளை ஆசிரியர்களான எஸ்.எம்.எம்.அபூபக்கர், ஜே.எம்.நௌபாஸ் ஆகியோரும் மருதூர் கொத்தன் நினைவுப் பிரதியை அப்துல் கபூர் கலிலுர் ரஹ்மானும் பெறவுள்ளனர்.

ஏற்புரையையும், நன்றியுரையையும் நூலாசிரியர் றகுமான் ஏ ஜமீல் வழங்கவள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -