இலங்கை இடம்பெயர் தொழிலாளர் கூட்டனியின் பெருநாள் வாழ்த்து

எம்.வை.அமீர் -

இஸ்லாமிய சகோதர மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த தியாகத்திருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக இலங்கை இடம்பெயர் தொழிலாளர் கூட்டனியின் பிரதம அமைப்பாளர் றக்கீப் ஜௌபார் அவர்கள் தெரிவித்தார்.

இறை தூதர் இப்ராகிம் (அலை) , தனது பால் குடி மறவாத இஸ்மாயில் ( அலை ) அவர்களை யும் அவரது மனைவி ஹாஜரா அன்னை அவர்களையும் இறைவனின் ஆணைக்கிணங்க தண்ணீரே இல்லாத பாலைவனததில் தனியாக விட்டுச் சென்றார், பல வருடங்கள் கடந்த பின்னர் மீண்டும் அவர்களை தேடிச்சென்று அன்பு மகனையும் மனைவியையும் சந்தித்தார்கள். மேலும் இறைவனுக்கு தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றவும் , இறைவனின் ஆணையை செயற்படுத்தவும் தனது மகனை வாளால் வெட்டி பலி கொடுக்க தயக்கமில்லாமல் துணிந்தார்... இந்த தியாக வரலாற்றை உலகமே நினைவு கூறும் புனித நாள் இதுவாகும். 
பாலைவனமே தியாகத்தின் வித்திடம்தான் என்பதை பிரபஞ்சத்தின் இறைவன் 3000 வருடங்களக்கு முதலே நமக்கு உதாரணமாக காட்டித்தந்திருக்கிறான். எனவே தியாகம்தான் வரலாறு படைக்கும், பொறுமைதான் வெற்றியின் படிக்கட்டுகள் ஆகும். எனவே , உறவுகளைப் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் நெஞ்சங்கள் அனைவருக்கும் , மற்றும் அவர்களை பிரிந்து நாட்டில் வாழும் உறவுகளுக்கும் உங்கள் கஷ்டங்கள் நீங்கி, உங்கள்தியாகங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் இறைவன் ஈடேற்றம் தருவானாக என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -