கடந்த சில தினங்களாக பெரும் சல சலப்பை ஏற்படுத்தியுள்ள ஆசாத் சாலியின் விவகாரம் தொடர்பாக முஸ்லிம்களுக்கு எதிராக இயங்கிவரும் முகநூல் பக்கங்களில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் செய்தி இணைய தளம் ஒன்றிற்கு கருத்து வெளியிட்டிருந்த ஆசாத் சாலி உவைஸ் அவர்களின் மனைவி அவரது வீட்டில் இருக்க பிடிக்காமல் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்திருந்தாகவும் அதற்க்கு மார்கத்தில் இடமில்லை என புத்திமதி கூறி தான் அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உவைசின் மனைவி தற்போது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் அவர் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார் அவர் விவாகரத்து பெற்ற பின்னர் அவர் என்னை மனம் முடிக்க விருப்பினால் அவரை நான் மனம் முடிப்பேன் அதை யாராலும் தடுக்க முடியாது என குறிப்பிட்டிருந்தார் இது தொடர்பாக ஐ எஸ் முஸ்லிம் தீவிரவாதம் .எனும் முக நூல் பக்கம் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
பொதுபலயவை தூற்றிய ஆசாத் சாலி கீழ்த்தரமான ஒரு செயலை செய்துள்ளதாகவும் இந்த கீழ்த்தரமான ஒரு செயலை செய்தவர்கள் இன நல்லுறவை எமக்கு சொல்லித்தர முனைவதாகவும் இது போன்றவர்களுக்கு எமது வெட்கமில்லாத தலைவர்கள் வக்காலத்து வாங்குவது தான் கவலைக்குரியது என விமர்சிக்கப்பட்டுள்ளது.
குறித்த பதிவு முப்பதாயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ள முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
