பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவுக்கு இடையில் நேற்று நாடாளுமன்றில் சூடான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது மீண்டும் ரணில் விக்ரமசிங்கவை பார்த்து “பூசணிக்காய்” வாயை மூடிக்கொண்டிருக்கவும் என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு பதலளித்த பிரதமர்,
இந்த பூசணிக்காய் கூறுவதனை கேளுங்கள், தாங்கள் இது தொடர்பில் பேசுவதற்கு எவ்வித உரிமையும் கிடையாது. தாங்கள் இதுவரையிலான காலப்பகுதியிலும் நாடாளுமன்றத்தை குறித்து சிந்திக்கவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புண்ணியம் கிடைக்க வேண்டும். தாங்கள் புண்ணியத்தில் வந்தவர்.
இந் நாட்டில் இன்று சர்வாதிகார எதிர்க்கட்சியும், ஜனநாயக அரசாங்கமும் செயற்படுகின்றது என பிரதமர் ரணில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் கொண்டுவரப்பட்ட நிதி சட்ட மூலத்திற்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவித்தமையினால் இவ்வாறான அமைதியற்ற நிலைமை ஒன்று நேற்று உருவாகியுள்ளது.
