புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு முஸ்லிம் சமய திணைக்களத்தில் பதிவு செதிருந்த ஜப்பானில் தொழில்புரியும் இலங்கையர் ஒருவரது குடும்பத்துக்கு ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் தொழில் புரியும் தெஹிவளையில் வசித்துவரும் எஸ்.எம்.எம்.றிபா என்பவர் தனக்கு நடந்த அநீதி பற்றி பாராபட்சமற்ற விசாரணை நடத்துமாறு தபால் முஸ்லிம் சமய கலாசார அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீமிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து ரிபா தெரிவித்ததாவதுஇ நான் ஜப்பானில் நீண்டகாலமாக வர்த்தகம் செது வருகின்றேன். அந்த வகையிலே ஜப்பான் நாட்ட்டு யுவதியினை இஸ்லாமிய முறைப்படியில் திருமணம் செது அதனூடாக மூன்று பெண் பிள்ளைகளையும் இரண்டு ஆண் பிள்ளைகளையும் பெற்று இஸ்லாமிய முறையுடனான வாழ்க்கையை பின்பற்றி பிள்ளைகளும் மணைவியும் தெஹிவலையில் வசித்துவருகின்றேன்.
கடந்த 2013ல் புனித ஹஜ் கடமைக்கு செல்வதற்காக றிபா முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் (இலக்கம் 3204) விண்ணப்பித்திருந்தும் தவிர்க்க முடியாத காரணத்தினால் ஹஜ் கடமையினை நிறைவேற்ற முடியாதென எழுத்து மூலம் திணைக்களத்திற்கு அறிவித்த பின்னர் 2014ல் ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்க்கு விண்ணப்ப இலக்கம் 1691 ஊடாக தயாராகியிருந்த நிலையில் ஜப்பானில் தொழில் புரிந்து வந்த காரணத்தினால் 2015இல் ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்கான அனுமதியினை கோரி விருப்பத்தினை தெரிவித்திருந்தேன்.
அந்த வகையிலே இவ்வருடம் ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக சகல வேலைகளையும் புறம்தள்ளிவிட்டு ஜப்பான் நாட்டிலிருந்து இலங்கை வந்தடைந்த எனக்கு ஏமாற்றமே பரிசாக கிடைத்தது. ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்கான அறிவித்தல்கள் எதுவும் திணைக்களத்திலிருந்து கிடைக்கப்பெறாமையினால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திணைக்களத்திற்கு சென்ற போது அங்கு கடமையிலிருந்த அலுவலர்களிடம் வினவிய பொழுது ஏற்கனவே ஹஜ் கடமையினை நிறைவேற்றியுள்ளதாக கூறி இம்முறை ஹஜ் கடமை நிறைவேற்ற மறுக்கப்பட்டமைக்கான காரணத்தினை தெளிவுபடுத்தினர்.
மறுபக்கத்திலே எனது வாழ் நாட்களில் ஒரு தடவையேனும் நான் சவூதி அராபியா பயணிக்கவுமில்லை ஹஜ் கடமையினை நிறைவேற்றவுமில்லை எனக் கூறி இவ்விடயம் சம்பந்தமாக விசாரணையினை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைகளத்தின் பணிப்பாளருக்கு கடிதத்தினையும் நேரடியாக கையளித்தேன். இரண்டொரு நாட்களில் இதற்குறிய பதிலினை தருவதாக திணைக்கள தரப்பிலிருந்து றிபாக்கு பதிலளிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை எனக்கு திணைக்களத்திலிருந்து எது வித பதில்களும் கிடைக்கவில்லை. நவமணி பத்திரிகை காரியாலயத்தில் தஞ்சமடைந்தார்.
எது எவ்வாறாக இருந்தாலும் ஹஜ் என்பது வன்முறைகளற்ற அல்லது வரம்புகளை மீறவியலாத அல்லாஹ்வின் வீடாகிய மக்கமா நகரில் நான் போகவிருந்த இடத்திற்கு இன்னுமொருவர் உள்வாங்கப்பட்டுள்ளார். பணம் கைமாறலே இதற்கு காரணமாகும். கூடுதலான பணத்தை செலுத்தி நான் இப்புனித பயணத்தை மேற்கொள்ள விரும்பவில்லை. எனினும் எனக்கு நடந்தது போன்ற நிகழ்வு எதிர்காலத்தில் யாருக்கும் நடக்கக் கூடாதென்பதற்காக இது குறித்து விசாரணை நடாத்தப்படவேண்டுமெனக் கோருகின்றேன்.
முகவர் நிலையங்களினூடாக வரும் விண்ணப்பங்களையே நாம் ஏற்றுக்கொண்டோம் என்று இது தொடர்பாக அதன் அதிகாரியான நூறுல் அமீன் தெரிவித்தார். முறைப்பாடு இருந்தால் அவற்றை விசாரணை செய்ய தயார் என்றும் தெரிவித்தார்.




