அக்கரைப்பற்றில் அரச அதிபரை வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வும் ஒன்று கூடலும்...!

நிஸ்மி, அக்கரைப்பற்று-

கிராமிய பொருளாதார அபிவிருத்திக்கும், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதிலும் பாரிய பங்களிப்பினைஅபிவிருத்தி உத்தியோகத்தர்களால் செய்ய முடியும் என்பதோடு, மூவின மக்கள் வாழும் அம்பாரை மாவட்டத்தில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும், பரஸ்பர புரிந்துணர்வையும் ஏறபடுத்துவதோடு, நிரந்தர சமாதானத்தினூடாக சுபீட்சமுள்ள மூவின சமூகத்தை அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் உருவாக்கமுடியும் என்று அரசாங்க அதிபர் துஷித பி வணிகசிங்ஹ தெரிவித்தார்.

அம்பாரை மாவட்ட புதிய அரசாங்க அதிபராகக் கடமையேற்றுள்ள திரு.துஷித பி வணிகசிங்ஹ அவர்களை வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வும் அம்பாரை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பிரதேச இணைப்பாளர்கள் மற்றும் மாவட்டத்தில் கடமையாற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ளும் ஒன்று கூடல் - 2015 நிகழ்வும் இன்று (22) செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று ஏசியா செப் ரெஸ்டூரன்ட் இல் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அம்பாரை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.எம்.கபீர் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை அரசாங்க அதிபர் துஷித பி வணிகசிங்ஹ அவர்கள் கலந்து கொண்டதோடு, கௌரவ அதிதியாக மேலதிக அரசாங்க அதிபர் அஷ்-ஷேய்க் எம்.ஐ.அமீர் அவர்களும் அதிதிகளாக இறக்காமம், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, சாய்ந்தமருது, தமண பிரதேச செயலாளர்களான எம்.எம்.நஸீர், ஏ.எம்.ஏ.லெத்தீப், வி.ஜெகதீஸன், ஏ.எல்.எம்.சலீம் உதவி பிரதேச செயலாளர் ஏ.சாபீர் முதலியோர் கலந்து கொண்டதோடு, அம்பாரை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் 20 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குமான இணைப்பாளர்கள் முதலியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்விற்கு வருகை தந்த அரச அதிபர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின்; தலைவர் கே.எம்.கபீர் தலைமையில் வரவேற்கப்பட்டார்.

இதன்போது அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின்; தலைவர் கே.எம்.கபீர் தங்களது சங்கத்தின் செயற்பாடுகள் பற்றியும், அவாகள் எதிர் நோக்கும் போக்குவரத்துப் பிரச்சினைகள் பற்றியும் விளக்கினார். பின் அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் சார்பில் ; தலைவர் கே.எம்.கபீர் அரசாங்க அதிபர் அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கினார்.

அரசாங்க அதிபர் துஷித பி வணிகசிங்ஹ அவார்கள் சிறப்புரையாற்றிய பின் சங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தையும் அரசாங்க அதிபர் ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து

புதிய சங்க இணைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களும் வழங்கப்பட்டன.
சங்கச் செயலாளர் எஸ்.ஆப்தீன் அவர்களின் நன்றியுரையுடனும், மதிய போசன உபசாரத்துடனும் நிகழ்வு நிறைவு பெற்றது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -