குவைத் பள்ளிவாசல் குண்டுத் தாக்குதல் : ஏழு பேருக்கு மரண தண்டனை

குவைத் பள்ளிவாசல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில், அங்குள்ள நீதிமன்றம் ஒன்று ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.  குறித்த தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர். 

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட மேலும் எட்டு நபர்களுக்கு 15 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற இந்தத் தாக்குதலை தாங்களே நடத்தியதாக, இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் குழுவினர் தெரிவித்திருந்தனர். 

அந்தப் பள்ளிவாசல் ஷியாப் பிரிவினரால் மதவழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. 

ஷியாப் பிரிவினர் இஸ்லாமியக் கொள்கைகளுக்கு முரணானவர்கள் என்று கூறும் ஐ எஸ் அமைப்பு, அவர்களை அடிக்கடி தாக்கி வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -