அசினுக்கும் , மைக்ரோமெக்ஸ் உரிமையாளருக்கும் திருமணம்!

’உள்ளம் கேட்குமே’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அசின், எனினும் முதலில் வெளியானது எம் குமரன் S/o மகாலட்சுமி’. இந்த படத்தையடுத்து தொடர்ச்சியாக கமல், அஜித், விஜய், சூர்யா, என ஜோடி சேர்ந்தவர் தமிழின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின்னர் ‘கஜினி’ படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர்கானுடன் இணைந்து நடித்தவர் பின்னர் இந்தி படங்களில் மட்டுமே ஆர்வம் காட்டினார். 

அமீர்கான், சல்மான் கான், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் திடீரென அங்கும் வாய்ப்புகள் குறைய நீண்ட இடைவெளிக்குப் பிறகு அபிஷேக் பச்சனுடன் இணைந்து ‘ஆல் ஈஸ் வெல்’ படத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில் அசின் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார். இந்தியாவின் மிகப்பெரிய கையடக்கத்தொலைபேசி நிறுவனமான மைக்ரோமெக்ஸின்  உரிமயாளர்களில் ஒருவரும், பெரும் தொழிலதிபருமான ராகுல் ஷர்மாவை தான் அசின் திருமணம் செய்யவிருக்கிறார். 

திருமணத்திற்கு பிறகு நடிக்கும் எண்ணம் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அவர் ஒப்பந்தமான அனைத்து சினிமா வேலைகளையும் முடித்துவிட்டு திருமணம் விரைவில் நடைபெறும் என தெரிகிறது. நீண்ட நாட்களாக நெருங்கி பழகி வந்த இருவரும் பொறுமையாகவே கலந்து பேசி இந்த திருமண முடிவை எடுத்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -