கிழக்கு மாகாணத்தின் பாசிக்குடாவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் குடும்பத்தினர் தங்கள் வார இறுதி விடுமுறையை உல்லாசமாக கழித்துக் கொண்டிருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாசிக்குடா கடல் பிரதேசத்தில் மஹிந்த மற்றும் அவரது புதல்வர்கள் நீச்சல், வோட்டர் ஸ்கூட்டர் போன்ற விளையாட்டுக்களிலும் ஈடுபட்டு உல்லாசமாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர்.
அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான நட்சத்திர தங்கு விடுதியில் மஹிந்த மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இலவச தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் இங்கு தங்கியிருக்கும் காலப்பகுதியில் கூட அப்பகுதியில் இருக்கும் அரச ஊழியர்களான சிங்கள மக்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டும் மஹிந்த, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களை சந்திப்பதை வேண்டுமென்றே தவிர்த்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





