முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்த மஸ்தான் ஹாஜி,ஹுனைஸ் பாருக்..!

சபீக் ஹுசைன்-

ன்னி மாவாட்டத்தின் அபிவிருத்தி மற்றும் வன்னி மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று (10) இரவு வன்னி மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுடன் கட்சி தலைமையகம் தாருஸ்ஸலாமில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.

வன்னி மாவட்ட அபிவிருத்தி பணிகளுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் முஸ்லிம் காங்கிரஸுடன் ஒரு குழுவாக இயங்கி வன்னி மாவட்ட அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தார். 

இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் ஹாஜியாரும் வன்னி மாவட்ட அபிவிருத்தி பணிகளுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து செயற்பட முன்வந்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மன்சூர், பைசல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், ஸல்மான் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தொளபீக், முத்தலிப் பாவா பாருக் ஆகியோரும் கலந்துகொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -