சம்மாந்துறையில் மஹிந்த தேசப்பிரியவுக்கு “ஜனநாயக மனிதன்” என்ற பட்டம்..!

அபு அலா –

தேர்தல் திணைக்களத்தின் 60 ஆவது நிறைவும், இஸ்லாமிய சமய நிகழ்வும் எதிர்வரும் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை ஹிஜ்ரா ஜூம்ஆப் பள்ளிவாயலில் நடைபெறவுள்ளன.

அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திலினி விக்கரமரத்தன தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வுக்கு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

இந்நிகழ்வில், இலங்கை முஸ்லிம்களின் சமூக, கல்வி மற்றும் அரசியல் ஆய்வு மையம் (மெஸ்பரோ) அமைப்பின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பரினால் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு “ஜனநாயக மனிதன்” என்ற பட்டம் சூட்டி பொண்னாடை போர்த்தி ஞாபகச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.

மேலும், இந்நிகழ்வில் அரசியல் கட்சியின் தலைவர்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச சேவை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -