பேரியல் அஷ்ரப் , ஹஸனாஹ் சேகுஇஸ்சதீன் ஆகியோர் பங்கேற்புடன் புத்தக வெளியீடு...!

அஸ்ரப் ஏ சமத்-

இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளா் சங்கம் ” நேற்று(04) வெள்ளவத்தை குலோபா் டவா் ஹோட்டலில் இரண்டு முஸ்லீம்கள் பற்றிய நுால்களை வெளியீட்டது.

இஸ்லாமிய நோக்கில் பால்நிலை சமத்துவம் மற்றும் சமநீதி, மற்றும் முஸ்லீம் விவாவக விவாகாரத்துச் சட்டமும் என்று பல மாா்க்க அறிஞா்களது ஆக்கள் ஒன்று சோ்த்த நுால்கள் வெளியீட்டு வைக்கப்பட்டது.

இந் நுாலில் வணக்க வழிபாடுகளில் சமத்துவம், இஸ்லாமிய நோக்கில் திருமனம், நெருங்கிய வாழ்க்கைத் துனை வன்முறை, இஸ்லாத்தில் பலதாரத் திருமணம் ஒரு பண்முக நோக்கு போன்ற பல்வேறு தலைப்புக்களில் நளிமியா பட்டதாாிகள் கட்டுரைகளை வரைந்துள்ளனா். 

இதனை இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளா் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளா் எம்.ரி.ரஸ்மின் சட்டத்தரணி ஹஸனாஹ் சேகுஇஸ்சதீன் தொகுத்து நுாலக வெளியீட்டுள்ளனா். 

இந் நுால் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சா் பேரியல் அஸ்ரப் கலந்து கொண்டாா். அத்துடன் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினா் முஜிபு ரஹ்மானிடம் நீதி அமைச்சா் விஜயதாச ராஜபக்சவினைச் சந்தித்து முஸ்லீம் விவாக விவாகரத்துச் சட்டம் பற்றிய சட்டச் திருத்தங்களை முன்னெடுக்குமாறு கடிதம் கையளிக்கப்பட்டது. 

சட்டத்தரணி சபானா ஜீனைதீன் மற்றும் முன்னாள் மீள்பாா்வை ஆசிரியா் சிறாஸ் மசுர் ஆகியோறும் நுால் பற்றி உரையாற்றினாா்கள்.

நுாலின் பிரதிகள் கட்டுரை களை எழுதிய நளிமியாக்கள் ஜனாபா பேரியலிடமிருந்து பெற்றுக் கொண்டனா்



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -