பௌத்த விகாரைக்கு வந்த சோதனையும் சிறுபான்மையினரின் உதவியும்..!

எம்.டி.எம்.அஸாம்-

ஹொரம்பாவ சிங்ஹபுர விகாரையில் நீர் தட்டுப் பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் தம்பதெனிய வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி உவைஸின் தனிப்பட்ட நிதியிலிருந்து விகாரையில் குழாய்க் கிணறு அமைப்பதற்காக நிதியுதவி வழங்கப்பட்டது.

மேற்படி விகாரையில் 25 பௌத்த பிக்குகள் முழுநேரமாக கடமையாற்றுவதோடு அவர்களுக்கான குடிநீரை ஊர்மக்கள் போத்தல்களில் கொண்டுவந்து கொடுப்பதோடு, ஏனைய தேவைகளுக்காக சுமார் மூன்று கி.மீ தூரம் செல்லவேண்டியுள்ளது.

இரண்டரை ஏக்கர் கொண்ட விகாரைக் காணியில், நீரைப் பெற்றுக் கொள்வதற்காக இதுவரை 18 இடங்களில் கிணறுகள் வெட்டியும் நீரைப் பெற்றுக் கொள்ளமுடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

இதனை நிவர்த்தி செய்யும் வகையில் விகாரை பூமியில் குழாய்க் கிணறு அமைப்பதற்காக, ஹொரம்பாவவையைச் சேர்ந்த சமூக சேவையாளரும் தம்பதெனிய வைத்தியசாலை வைத்தியருமான உவைஸின் தனிப்பட்ட நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்பட்டது. இதனடிப்படையில் முதற்கட்டமாக சுமார் 190 அடி குழாய்க்கிணறு தோன்டும் பனி அன்மையில் நடைபெற்றது. இருந்தபோது அதில் நீர் கிடைக்காமையால் இரண்டாம் கட்டமாக மேலும் தோண்டும் பனிகள் இன்னும் சில நாட்டகளில் மேற்கொள்ளப்படவுள்ளது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -