முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விசாரணைகளுக்காக முன்னிலையாகியுள்ளனர்.
நிதி மோசடிகள் தொடர்பில் வாக்கு மூலம் அளிப்பதற்காக இவ்வாறு முன்னிலையாகியுள்ளனர்.
இரண்டு வெவ்வேறு நிதி மோசடிகள் குறித்த விசாரணைகளுக்காக இன்று காலை நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் கோத்தபாய மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.
கோத்தபாயவும் நாமலும் ஏற்கனவே சில தடவைகள் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி வாக்கு மூலங்களை அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
