நடிகர் சங்க தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடு பறக்கத் தொடங்கியுள்ளது. விஷால், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினர் ஆரம்ப கட்டத்தில் நாடக நடிகர்களை சந்தித்து தங்களது அணிக்கு ஆதரவு திரட்டி வந்தனர்.
தற்போது, சினிமா நடிகர்களை சந்தித்து தங்களது அணிக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். அந்த வரிசையில், சமீபத்தில் ரஜினி, கமல், விஜய் என அனைவரையும் நேரில் சந்தித்து தங்களது அணிக்கு ஆதரவு கோரினர்.
இந்நிலையில் நேற்று, நடிகர் சூர்யா, சிவகுமார், தம்பி ராமையா, நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், விஜயகுமாரி ஆகியோரை நேரில் சந்தித்து தங்களது அணிக்கு ஆதரவு கோரியுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது, பாண்டவர் அணி சார்பில், நாசர், விஷால், பொன்வண்ணன், ரித்தீஷ், கார்த்தி, ரமணா, ஆதி ஆகியோர் உடன் சென்றனர்.

