சியாத் அகமட் லெப்பை-
சிங்கப்பூர் இருந்து துபாய்க்கு சென்ற MT- BREU கப்பல் அறுகம்பே கடலில் வைத்து நேற்று (21) காலை 5 மணியலவில் பலுதடைந்ததன் காரணமாக கப்பலின் மாலுமி ஒருவரும் மற்றும் ஊளியர் ஒருவரும் அறுகம்பே மீனவர் ஒருவரின் படகிலேயே தரைக்கு சென்றனர்.
மேலும் அறுகம்பே பகுதிக்குள் சென்ற இருவரும் பொத்துவில் கடற்படையினர்களுக்கோ பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்காமையினால் சந்தேகத்துக்குள்ளானார்கள்.
நங்கூரத்தில் நிறுத்திவைக்கப்பபட்ட கப்பல் சந்தேகத்திற்குள்ளானதால் கடற்படையினர்களால் சோதனை செய்யப்பட்டது.
மேலும் இது குறித்து சந்தேகத்திற்குள்ளான மியன்மாரைச் சேர்ந்த தங்கடாய் குறித்த கப்பலின் மாலுமியும் இந்தியாவைச் சேர்ந்த மற்றுமொரு சகித் ஜாவித் என்பவரும் பொலிஸாரினால் விசாரணைக்குள்ளானார்கள்.
விசாரணையின் போது,
தாங்கள் சிங்கப்பூரில் இருந்து துபாய்க்கு சென்று கொண்டிருந்தபோது கப்பலில் ஏற்பட்ட சிறிய ஓட்டையின் காரணமாக நீர் கப்பலுக்குள்ளே வரத் தொடங்கியது தொழில்நுட்ப ரீதியாக தங்களின் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது கப்பலின் கெப்டன் ஜன்கொன்ங் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஸாத் அவர்களோடு தொடர்பு கொள்வதற்காக தரைக்கு வந்தோம் என விசாரணையின் போது தெரிவித்தார்கள்.
பொத்துவில் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் கடற்படை பொறுப்பதிகாரி இவர்களுக்கான தொடர்புகளை ஏற்படுத்தி கப்பலை காலி துறைமுகத்துக்கு அனுப்பி வைத்தனர்.



