கொடதெனியா 5 வயது சிறுமி சேயா செதவ்மியின் படுகொலை தொடர்பில் நேற்று கம்பஹா – படுவத்துகொட வனப் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்ட நபர் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சேயா செதவ்மியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர், கொலை செய்ததாக குறித்த 36 வயதுடைய நபர் ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
சேயா செதவ்மியின் வீட்டுக்கு அருகாமையில் வசித்த குறித்த நபர் இதற்கு முன்னரும் குழந்தைகளை மற்றும் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிகின்றன.
