லண்டன்: 25வது வயதில் ராணியான இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்தை அதிக காலம் ஆண்ட ராணி என்ற சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து வரலாற்றில் விக்டோரியா தான் அந்நாட்டை அதிக காலம் ஆண்ட ராணியாக இருந்தார். அவர் இங்கிலாந்தை 63 ஆண்டுகள் 7 மாதம், 2 நாட்கள், 16 மணிநேரம் மற்றும் 23 நொடிகள் ஆண்டார். இந்நிலையில் ராணி விக்டோரியாவின் சாதனையை இரண்டாம் எலிசபெத் ராணி தனது 89வது வயதில் முறியடித்துள்ளார். இங்கிலாந்தை அதிக காலம் ஆண்ட ராணி என்ற பெருமையை எலிசபெத் பெற்றுள்ளார்.
இங்கிலாந்தை அதிக காலம் ஆண்ட ராணி என்ற பெருமையை பெற்ற எலிசபெத்திற்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விக்டோரியா மகாராணி தனது 18வது வயதில் இங்கிலாந்தின் ராணியானார். எலிசபெத் தனது தந்தை ஜார்ஜ் இறந்த பிறகு தனது 25வது வயதில் 1952ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி இங்கிலாந்தின் ராணியாக மகுடம் சூட்டிக் கொண்டார். எலிசபெத் ராணியாக ஆன பிறகு இங்கிலாந்தில் வின்ஸ்டன் சர்ச்சில் உள்பட 12 பேர் பிரதமர் ஆகியுள்ளனர். இங்கிலாந்தை இதுவரை ஆண்டவர்களிலேயே இரண்டாம் எலிசபெத் தான் சிறந்தவர் என்று கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்தை அதிக காலம் ஆண்ட ராணி என்ற பெருமையை பெற்ற எலிசபெத்திற்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
