ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்- ஹிஸ்புல்லாஹ், முஜீபுர் ரஹ்மான்,இம்ரான்,அலி சாகிர்,தவம், சிராஸ்


(அகமட் எஸ். முகைடீன்)புரிதலுடன் வாழ்ந்து, மனக் கறையகற்றி, மணங்கமலும் நல்லதோர் வாழ்வினை இஸ்லாமிய அடிப்படையில் வாழ்வதற்கு புனித ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருல்புரிய பிரார்த்திப்பதாக கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளருமான சிராஸ் மீராசாஹிப் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் இப்றாஹீம் நபி (ஸல்) அவர்களின் பெரும் தியாகத்தை நினைவூட்டும் ஹஜ்ஜூப் பெருநாள் எம்மத்தியிலும் தியாக உணர்வை ஏற்படுத்துவதோடு இஸ்லாம் காட்டித்தந்த சீரிய பாதையில் பயனிப்பதற்கு ஆசையுடையவர்களாக அனைவரையும் மாற்ற வேண்டும். உலக மக்கள் சகோதரத்துவத்துடனும் இன நல்லுறவுடனும் வாழ்வதற்கு வழிகுக்கும் ஒரு திருநாளாக இந்நாள் அமைவதோடு எமது நாட்டில் நல்லாட்சி நீடிக்கவும் இறைவன் துணைபுரிய வேண்டும். அத்தோடு புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றிய ஹாஜிகளின் ஹஜ்களை இறைவன்  பொருந்திக் கொள்வதற்கும் ஏனையவர்களுக்கும் புனித ஹஜ் கடமையினை  நிறைவேற்ற அருல்பாலிப்பதற்கும் இறைவனிடம் இருகரம் ஏந்தி பிராத்திப்பதாகவும் தெரிவித்தார்.
(எம்.ஐ.எம்.றியாஸ்)
தியாகத்தை மீண்டும் நினைவூட்டும் புனித ஹஜ் பெருநாளை இன்று கொண்டாடும் அனைத்து முஸ்லிம் மக்களும் துயரங்களின்றி நிம்மதியாக இந்நாட்டில் வாழ இறைவனை பிரார்த்திப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதி உயர்பீட உறுப்பினருமான ஏ.எல்.தவம் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 
இந்த நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள நல்லாட்சியின் மூலம் இன மத குல பேதமின்றி  மூவின மக்களும் இந் நாட்டில் நிம்மதியாக வாழ வழிபிறந்துள்ளது முஸ்லிம் மக்கள் இத் தினத்தில் நினைத்த நேரம் நினைத்த இடத்திற்கு சென்று வர கூடிய அளவுக்கு இந்நாடு இன்று சுதந்திரத் திருநாடாக மாறியுள்ளது இத்தியாக திருநாளில் சகல இன மக்களும் நிம்மதியாக வாழ்ந்து ஒற்றுமையுடன் பாகுபாடின்றி செயற்பாட இறைவனை மீண்டும் ஒரு முறை பிரார்த்திக்கின்றேன். 
இறைவனுக்காக செய்யும் தியாகத்தில் இறைத்தூதர் இப்றாஹிம் நபி(அலை) அவர்களைப் போல்  எமக்கு தியாகம் செய்ய முடியா விட்டாலும் நம்மால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவு இறை கட்டளைகளுக்கு அடிபணிந்து இறை தூதர் காட்டிய வழியில் மட்டும் நடந்து தன்னலமற்ற உணர்வோடும் சகிப்புத் தன்மையோடும் உலக மாந்தரில் உயர்வானவர்களாய் வாழ இத்தியாக திருநாளாம் இந்த ஹஜ்ஜுப் பெருநாளிலே ஏற்கனவே கொண்டுள்ள நல்ல எண்ணங்களைப் புதிப்பித்து வாழ்ந்து மறுமையிலும் இறைவனின் அருளைப் பெறுவோமாக இத்தினத்தில் சகல மக்களுக்கும் சாந்தி சமாதானம் ஒற்றுமை சகிப்புத்தன்மை புரிந்துணர்வு சகவாழ்வு மற்றும் தியாகத்துடன் வாழ இத் தினத்தில் இறைவனை பிரார்த்திப்பதாக மாகாண சபை உறுப்பினர் மேலும் தெரிவித்தார். 

"இறை தியாகத்தை உலகறியச் செய்த - இத்தியாகத் திரு நாளாம் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தினிலே - தியாக உணர்வும் , இறை அச்சமும் , மனித நேய-நற்பண்புகளும் எமக்குள் மேலோங்க உறுதி பூளும் நாளாக இப்பெருநாள் தினம் அமைய எல்லாம் வல்ல நாயனை வேண்டியவனாய் - ஹஜ்ஜுப் பெருநாளை மகிழ்வுடன் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய நெஞ்சங்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியை அடைகின்றேன் "- 
இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா அவர்கள் விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது - 
அத்துடன் , இஸ்லாத்தில் ஐம்பெரும் கடமைகளில் இறுதியான ஹஜ் கடமை உலகிற்கு உணர்த்தும் பாடமான ஐக்கியம்  , சகோதரத்துவம்  , தியாக சிந்தனை என்பவற்றை அனைவரும் முன் மாதிரியாக கொண்டு பற்றுறுதியுடன் செயற்பட்டு ஈருலக வாழ்விலும் வெற்றி பெற திட சங்கற்பம் பூளுவதுடன் - இத்தியாகத் திரு நாளிலே உலகளாவிய ரீதியில் அல்லலுறும் எம் சகோதர முஸ்லிம்களின் விமோசனத்திட்காகவும் நிம்மதியான வாழ்விற்காகவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக -
அனைவருக்கும் இனிய ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் -
என பாராளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது - 

தியாகத்தையும் பொறுமையையும் பரைசாற்றும் இத்தியாகத் திருநாளில் நமக்காக, நம்சமூகத்திற்காக, நம்நாட்டிற்காக தியாக உணர்வுடன் செயற்பட்டு சமூகத்தின் சுபீட்சத்திற்காகவும் நாட்டின் ஒற்றுமைக்காகவும் ஒன்றுபட்டு உழைப்பதற்கு திடசங்கர்ப்பம் பூண வேண்டும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 
குறித்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இறை தூதரான இப்றாஹிம் நபி (ஸல்) அவர்களின் தியாக உணர்வை நினைவுகூர்ந்து ஹஜ் கடமையை நிறைவேற்றி, உழ்ஹிய்யா கொடுத்து உவகை கொள்ளும் திருநாளாக உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் இப்பெருநாள் அமைகின்றது.
ஐம்பெரும் கடமைகளில் இறுதியானதாக காணப்படுகின்ற இந்த ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் இறைவனை அடிபணிவதன் முழுமைத் தன்மையை நாம் உணர்வதன் மூலம் அதன் பிரதிபலிப்புகள் எம் அன்றாட வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். 
அத்தோடு சமூக உணர்வு கலந்த சிந்தனையாளர்களாக நாம் மிளிர்வதன் மூலம் இன ஐக்கியத்தின் பிறப்பிடமாக திகழ்ந்து இந்நாட்டின் வளர்ச்சிக்கு எம்மாலான பங்களிப்பினை செய்ய முயல்வோமாக. 
இப்புனித தியாகத் திருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய உள்ளங்களுக்கும் இறைவன் ஈருலகிலும் ஈடேற்றத்தை நல்கி அருள் புரியவேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். (ஜுனைட்.எம்.பஹ்த்) 
சமூக ஒற்றுமை மேலோங்க பிரார்த்திப்போம். மலர்ந்துள்ள இப்புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் சமூக ஒற்றுமை மேலோங்க அனைவரும் பிரார்த்திப்போம் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.  
அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் புனித ஹஜ் கடமைக்காக மக்கா நகர் சென்ற ஹாஜிகள் அறபா மைதானத்தில் ஒன்று கூடினர். அதேபோல முஸ்தலிபா, மினா போன்ற தளங்களிலும் ஒன்றாகவே இருக்கின்றனர். இங்கு கருப்பர் - வெள்ளையர், உயர்ந்தோர் - தாழ்ந்தோர், ஏழை – பணக்காரன் என்ற எவ்வித வேறுபாடுகளும் இன்றி ஒற்றுமையோடு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.
இந்த முன்மாதிரியை நாம் நமது வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டும். அண்மைக்காலத்தில் தேர்தலொன்றை சந்தித்துள்ளதால் நமக்குள் கட்சி ரீதியான, தனிநபர் ரீதியான மனக் கசப்புகள் ஏற்பட்டிருக்கலாம். சுpல வேளை பிளவுகளும் ஏற்பட்டிருக்கலாம். இவை களையப்பட வேண்டும். சமூக நலன் கருதி ஒற்றுமையைப் பலப் படுத்த வேண்டும். 
இதன் மூலம் நம்முடையதும், எதிர்கால சந்ததியினரதும் நலன்களைப் பாதுகாக்க முடியும். எனவே, சமூகத்தின் ஒற்றுமைக்காக நாம் அனைவரும் இப்புனித நந்நாளில் பிரார்த்திப்போம். 


மோசமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் முஸ்லிம் சமூகம் உயர்ச்சி பெற நாம் எல்லோரும் பிரார்த்திப்போமாக என ஐக்கிய மக்கள் சுதந்திர் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும்,மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் புனிதஈதுல்   
அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.அவ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது..
முஸ்லிம் சமூகம் என்றுமில்லாத அளவு பல்வேறுபட்ட துன்பங்களையும்,சோதனைகளையும் இன்று சந்தித்துக் கொண்டு இருக்கின்றது. குறிப்பாக சர்வதேச ரீதியிலே அரபு நாடுகளில் சிரியா,யெமன்,ஜோர்தான்,ஈரான்,ஈராக்,லிபியா போன்ற பல்வேறு நாடுகளில் முஸ்லிம்கள் பல்வேறுபட்ட துன்பங்களையும்,துயரங்களையும்,சோதனைகளையும் சுமந்து கொண்டு இலட்சக் கணக்கான முஸ்லிம்கள் இன்று அகதிகளாக அந்நிய நாடுகளிலே பல மையில் தூரம் நடந்து குழந்தைகளை இழந்து உறவுகளை இழந்து ,உடல்,சொத்துக்களை இழந்து இன்று அகதிகளாக குடியேறுகின்ற ஒரு மிகப் பயங்கரமான ,பரிதாபகரமான ஒரு சூழ்நிலையிலேதான் நாம் புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாளை இன்று நாம் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம். 
ஆகவே குறிப்பாக முஸ்லிம்களுக்கு மத்தியிலே ஒற்றுமை ஏற்பட்டு அந்த நாடுகளிலே சமாதானம் ஏற்பட்டு அந்த மக்கள் நிம்மதியோடு வாழ்வதற்காக நாம் எல்லோரும் வல்ல இறைவன் அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்போமாக. 
குறிப்பாக ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் தியாகத்தை நினைவு கூறுக்கின்ற ஒரு நாள் நாம் முஸ்லிம்கள் தியாகத்தோடு வாழ வேண்டும் ,நன்றி உணர்வோடு இருக்க வேண்டும் ,ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் நாங்கள் எங்களுடைய இஸ்லாமிய பண்புகளை வெளிப்படுத்த வேண்டும் குறிப்பாக தியாகத்தோடு நாங்கள் தியாகத்தைச் செய்து ஏனையவர்களுக்காக வாழுக்கின்ற ஒரு சூழலை எங்களுக்கு மத்தியிலே ,எங்களுக்குள்ளே உருவாக்கிக் கொள்கின்ற ஒரு தியாக மனப்பாங்கை உருவாக்குகின்றதுதான் இந்த ஹஜ்ஜூப் பெருநாள் ஆகும். 
ஆகவே அவற்றை கருத்திலே கொண்டு எங்களுடைய வாழ்க்கையிலும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோமாக குறிப்பாக அந்த முஸ்லிம்களுக்காக பிராத்திப்போமாக ,இலங்கையிலே இன்று ஏற்பட்டு இருக்கின்ற அமைதி,சமாதானம் தொடர்ந்து இருந்து நாங்கள் நிம்மதியோடு இருப்பதற்காக நாங்கள் எல்லோம் அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்போமாக என கூறி உங்கள் எல்லோருக்கும் என்னுடைய புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துக்களை எனது குடும்பத்தில் சார்பிலும் எல்லோருக்கும் தெரிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன் என ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -