எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
விளையாட்டுத்துறை பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களுக்கு கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி கல்வி சமூகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் பழைய மாணவரான பிரதியமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கல்லூரி மீது பற்றும் பாசமும் வைத்துள்ளவர் மற்றுமல்லாது கல்லூரியின் கல்வி , விளையாட்டுத்துறை மற்றும் பௌதீக அபிவிருத்தியில் என்றும் கண்ணும் கருத்துமாக இருந்தும் வந்துள்ளார்.
எதிர்காலத்தில் இக்கல்லூரியின் அபிவிருத்தியில் முன்னேற்றகரமான திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல பல திட்டங்களை வகுத்துள்ளார். கல்லூரியின் பழைய மாணவரொருவருக்கு இவ்வாறான பிரதியமைச்சர் பதவி கிடைத்திருப்பது இம்மண்ணுக்கும் இக்கல்லூரி தாய்க்கும் பெரும் மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்முனைப்பகுதியில் மட்டுமல்லாது முழு இலங்கையிலும் வாழும் முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வியினை வழங்கும் தேசிய சொத்தான இக்கல்லூரியினை மேலும் அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்ல பிரதியமைச்சருக்கு இக்கல்லூரி கல்வி சமூகம் என்றும் உறுதுணையாக இருக்கும்.
கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் , பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , கல்விசாரா ஊழியர்கள் , பழைய மாணவர் சங்கம் , பாடசாலை அபிவிருத்திச் சங்கம் , பழைய மாணவர் சங்க கொழும்பு கிளை ,பெற்றோர்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்
