கருணாவை தொடரும் வெள்ளைவேன் - ஓடித்திரியும் கருணா

சமீபத்தில் புதிய தலை முறை TV க்கு கருணா சுடச் சுட ஒரு பேட்டி கொடுத்திருந்தார். இது சில சர்சையை கிளப்பியது. மகிந்த மேல் உள்ள கோபத்தில் இலங்கை ராணுவத்தை பழிவாங்கும் விதத்தில் கருணா பேசி இருந்தது யாவரும் அறிந்த விடையமே.

புலிகளின் தலைவர் பிரபாகரனை இலங்கை ராணுவம் ஒன்றும் செய்யவில்லை என்ற , தொணியில் கருணா பேசியது சிங்களவர் மத்தியில் மட்டுமல்ல இலங்கை ராணுவ தரப்பிலும் பல அதிருப்திகளை தோற்றுவித்துள்ளது.

இன் நிலையில் தான் சரத் பொன்சேக , கருணா சொல்வது பொய் என்ற கூற்றை வெளியிட்டார்.

இது இவ்வாறு இருக்க கருணா கொழுபில் பாவித்து வரும் கறுப்பு நிற பிக் அப் வாகனத்தை சில நாட்களாக ஒரு வெள்ளை வேன் பின் தொடர்ந்து சென்றுள்ளது என்று கூறப்படுகிறது.

கருணா பயணித்த சமயத்தில் குறித்த வெள்ளை வேன் இந்த பிக் அப் வாகனத்தை பின் தொடர்ந்ததால் கருணா பீதியுற்று ஒரு சமயத்தில் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய வழாகத்தினுள் தனது வாகனத்தை செலுத்துமாறு சாரதிக்கு தெரிவித்துள்ளார்.

அந்த அளவு பயந்து நடுங்கிய கருணா , உடனடியாக தனக்கு தெரிந்த மற்றும் தற்போது ஆழும் கட்சியில் உள்ள அரசியல்வாதி ஒருவருக்கு போனைப் போட்டு எனக்கே வெள்ளை வான் அனுப்புகிறீர்களா ? என்று கேட்டு பதறியுள்ளாராம் !

அப்படி எதுவும் நாம் செய்யவில்லை. அது மகிந்த காலத்தில் நீங்கள் இணைந்து செய்தது. தற்போது நல்ல ஆட்சி நிலவுகிறது. நாம் ஏன் வெள்ளை வேனை அனுப்பவேண்டும் என்று ஆழும் தரப்பு அரசியல்வாதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து , ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று எனக்கு தெரியும். நான் சிறிது காலத்திற்கு எந்த TV க்கும் பேட்டி கொடுக்க மாட்டேன். இதனை உரியவர்களிடம் சொல்லுங்கள் என்று மன்றாடி அழைப்பை துண்டித்துள்ளார் கருணா.

கருணாவின் நெருங்கிய சகா , இவ்வாறு கருணாவுக்கே நடக்கிறது என்றால் பாருங்களேன் என்று , தமது மற்றுமொரு நண்பருக்கு தெரிவித்துள்ளார் என கொழும்பில் உள்ள அதிர்வின் புலனாய்வுச் செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்றது போல, சாதாரண வெள்ளை வேன் பின்னால் வந்திருந்தால் கூட , கருணாவுக்கு உண்மையான வெள்ளை வேன் தான் நினைவுக்கு வந்திருக்கும்.

ஒரு காலத்தில் கோட்டபாயவுடன் கூட்டு சேர்ந்து இவர் ஆடிய ஆட்டம் எண்ணில் அடங்காதவை. தற்போது நிலமையைப் பார்த்தீர்களா ?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -