தேர்தல் ஆணையாளர் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம்..!

அபு அலா -

தேர்தல் திணைக்களத்தின் 60 ஆவது நிறைவும், இஸ்லாமிய சமய நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை (13) சம்மாந்துறை ஹிஜ்ரா ஜூம்ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திலினி விக்கரமரத்தன தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வுக்கு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில், உதவி தேர்தல் ஆணையாளர் முஹம்மட், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஷ்ஷெஹ் எம்.ஐ.அமீர், இலங்கை முஸ்லிம்களின் சமூக, கல்வி மற்றும் அரசியல் ஆய்வு மையத்தின் (மெஸ்பரோ) பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் உள்ளிட்ட அரச திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில், சம்மாந்துறை ஹிஜ்ரா ஜூம்ஆப் பள்ளிவாயலில் பேஸ் இமாமினால் விஷேட துஆ பிரார்த்தனையும், இலங்கை முஸ்லிம்களின் சமூக, கல்வி மற்றும் அரசியல் ஆய்வு மையம் (மெஸ்பரோ) அமைப்பின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பரினால் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு “ஜனநாயக மனிதன்” என்ற பட்டமும் சூட்டி பொண்னாடை போர்த்தி ஞாபகச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மெஸ்பரோ அமைப்பு தொடர்பிலும், அதன் நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் பற்றி அமைப்பின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பரிடம் மிக விரிவான கலந்தரையாடல் ஒன்றையும் நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

அபூ-இன்ஷாப்-

னி நபர்களாலோ அல்லது தனி குழுக்களினாலோ ஜனநாயகத்ததை ஏற்படுத்த முடியாது அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதற்கு அமைவாக அனைவரினதும் ஒத்துழைப்பின் காரணமாகவே உண்மையான ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று (13) ஞாயிற்றுக் கிழமை மாலை தெரிவித்தார்.

தேர்தல் திணைக்களத்தின் 60 வருடப் பூர்த்தியினையிட்டு சம்மாந்துறை ஹிஜ்றா பத்ர் ஜூம்மா பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய இஸ்லாமிய மத வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் திலின விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் 

தேர்தல் திணைக்களத்தின் 60வது வருட பூர்த்தியினை தேசிய ரீதியில் கொண்டாடும் வகையில் நான்கு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது அதாவது அநுராததபுரம் மகாபோதியிலும், யாழ்பாணம் மடு தேவாலயத்திலும், திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலையத்திலும், அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை ஹிஜ்றா பத்ர் ஜூம்மா பள்ளிவாசலிலும் ஏற்பாடு செய்துள்ளோம்.

சம்மாந்துறையினை தெரிவு செய்வதற்கான காரணம் இந்த மாவட்டத்தில் கூடுதலான முஸ்லீம்கள் செரிந்து வாழ்வதனாலும் சம்மன்காரர் இங்கு வந்து இறங்கிய இடம் என்பதனாலும், இந்த ஊரில் உள்ள மக்களிடத்தில் ஜனநாயகரீதியான நிர்வாக முறைமை தமது பள்ளிப்பரிபாலனங்களில் காணப்படுவதனை அறிந்தவன் என்பதனாலும் தெரிவு செய்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய மௌலவி அப்துல்றஹ்மான், மேலதிக அரசாங்க அதிபர் அமீர், முஹம்மட், அமீன் மௌலவி அவர்கள் கூறியது போன்று நாம் எல்லோரும் எல்ல மதத்தவர்களும் ஒட்டு மொத்தமாக எதிர்பார்பது ஜனநாயம் என்பதையே இந்த ஜனநாயக செயற்பாட்டினேயே எல்லா மதங்களும் வலியுறுத்துகின்றன அதனை நாம் தற்போது நிலைநிறுத்தியுள்ளோம் என்பதை நாம் மகிழ்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளோம்.

தோடர்ச்சியாக நாம் ஜனநாயக வழிமுறைகளில் ஒற்றுமையாக அடம்பன் கொடிபோல் செயற்பட வேண்டும் நாம் சிங்கள மொழியில் கேட்டாலும், அரபு மொழியில் கேட்டாலும், ஆங்கில மொழியில் கேட்டாலும், தமிழ் மொழியில் கேட்டாலும் கேட்கின்ற விடயம் ஒன்றுதான் அதுதான் ஜனநாயம் அது பாதுகாக்கப்பட வேண்டும்.

எனக்கு ஒரு கதை ஞாபகம் வருகின்றது மூன்று நாடுகளைச் செர்ந்த அதாவது ஈரான், துருக்கி, அரேபியா நாட்டவர்கள் ஒன்றாக இன்னொரு நாட்டுக்கு விஜயம் செய்கின்றார்கள் அங்கு சென்ற அவர்கள் நடையில் ஓர் இடத்துக்கு செல்கின்றனர் இவர்களுக்கு சரியான பசி சாப்பிட ஒன்றுமில்லை வாங்கிச் சாப்பிட கடைகளும் இல்லை களைத்தவர்களாக ஒரு நிழலில் தரித்து களைப்பாறுகின்றனர் அந்த சந்தர்பத்தில் அவ்வழியில் அந்த நாட்டை சேர்ந்த ஒருவர் வருகின்றார் அவரை நிறுத்தி எங்களுக்கு சாப்பிட எதாவது பெற்றுக் கொள்ளலாமா என்று இவர்களின் மொழியில் சைகையினால் கேட்க அம்மனிதர் சைகையினாலே என்ன வேண்டும் எனக் கேட்கின்றார்.

மூவரும் மூன்று மொழிகளிலே தமக்குத் தேவையான உணவை கேட்கின்றனர் சரியென்று தலையசைத்த விட்டு அம்மனிதர் செல்கின்றார் சற்று நேரத்தின் பின்னர் அவர் இம் மூவர் கேட்ட உணவையும் கொண்டு வருகின்றார் பார்கின்ற போது அனைவரும் கேட்டவை திராட்சைப்பழமாகவே இருந்தது அதே பொன்றுதான் நாம் அனைவரும் கேட்டதும் எதிர்பாத்ததும் ஜனநாயமகாகும் அதனை பாதுகாக்க வேண்டும்.

இஸ்லாமிய ஆட்சியின் கலிபாக்களான அபூபக்கர், உமர், உஸ்மான, அலி ஆகியோர்களின் கால செயற்பாடுகளை நாம் விளங்கி ஒற்றுமையுடன் வாழவேண்டும் எனவும் என்ணை கௌரவித்த உங்கள் அணைவருக்கும் நன்றி கூறிக் கொண்கின்றேன்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -