சுலைமான் றாபி-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடைய 1வது தேசியப்பட்டியல் உறுப்பினர் தனது பதவியை இராஜினாமா செய்வதன் மூலம் புதிய உறுப்பினர் ஒருவர் இம்மாதம் மூன்றாம் வாரத்தில் நியமிக்கப்படுவார் என மு.கா தலைவரும், அமைச்சருமான றஊப் ஹக்கீம் நேற்று (13) இரவு கல்முனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இருந்தாலும் புதிதாக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ள இந்தத் தேசியப்பட்டியல் எந்த மாவட்டத்திற்கு வழங்கப்படும், அந்த உறுப்பினர் யார் என்ற விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
