வசீம் தாஜூடீனின் சடலத்தை நல்லடக்கம் செய்ய நீதிமன்றம் அனுமதி!

ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் சடலத்தை நல்லடக்கம் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ், புலனாய்வுப் பிரிவினருக்கு இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.

தாஜூடீனின் சடலம் குறித்த விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாகவும் நல்லடக்கம் செய்ய அனுமதிக்குமாறும் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் கோரியுள்ளனர்.

கடந்த மாதம் 10ம் திகதி தாஜூடீனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டிருந்தது.

சடலத்தை எதிர்வரும் 18ம் திகதி மீளவும் நல்லடக்கம் செய்ய அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க புலனாய்வுப் பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.

தாஜூடீனின் மூத்த சகோதரி பாதிமா அயிசா தாஜூடீனிடம் சடலம் ஒப்படைக்கப்படவுள்ளது.

சடலத்தை நல்லடக்கம் செய்ய தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு பள்ளிவாசலிடம் நீதவான் கோரியுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -