நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி சாலையை உருவாக்கிய மறைந்தும் மறையாத தலைவர் அஷ்ரப்

 நாஸிறூன்- 

ன்று 2015.09.16 நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்ச்சி நிலையத்தில் மாவட்ட தொழிற்பயிற்ச்சி நிலைய நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மறைந்த பெருந் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத்தலைவருமான மர்ஹும் அஷ்ரப் அவர்களின் 15வது நினைவு தினம் மறைந்தும் மறையாத தலைவர் எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்பட்டது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்  எம்.ரீ. ஜப்பார் அலி; கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக  நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்ச்சி நிலைய உதவிப்பணிப்பாளர்களான திரு. வீ. கனகசுந்தரம், டீ. வினோதராஜா ஆகியோரும் சிறப்பு துஆ பிரார்த்தனை நிகழ்த்த மௌலவி அல்-ஹாஜ் அப்துல் ரஷீட் ஷர்க்கி அவர்களும், அல்-ஹாபிழ் ரஷீட் ஆதில் ஆகியோரும் பங்குபற்றினர்.

இன்றைய இந்நிகழ்வில் மறைந்த பெருந் தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களின் அரசியல் வாழ்க்கையில் அவர் கண்ட கனவுகளும் கண்முன்னே செய்து காட்டிய சாதனைகளும் எதிர்கால சந்ததியினருக்கு அவர் விட்டுச்சென்ற பாதைகள் பற்றியும் மறைந்த மாபெரும் தலைவர் போன்ற இன்னொரு தலைவர் இனி வரப்போதில்லை எனவும் அவருடைய இடத்தை பூர்த்தி செய்ய இதுவரை யாரும் இல்லை எனவும் சிறப்பு ஆய்வுரையினை நிந்நவூர் மாவவரட்ட தொழிற்ப்பயிற்ச்சி நிலைய முகாமைத்துவ உதவியாளரும் ஊடகவியளாலருமான ஏ.எல். நிப்றாஸ் அவர்கள் நிகழ்த்தியத்தினார்.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்ட நிந்தவூர் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஆவு. எம்.ரீ. ஜப்பார் அலி அவர்கள் தன்னுடைய உரையில் ஆயுதப்போராட்டம் தலைதூக்கிய காலப்பகுதியில் முஸ்லிம்களையும் ஆயதம் ஏந்தாது அவர்களை சரியான பாதையூடாக கொண்டு சென்று முஸ்லிம்களுக்கு என்று தனி ஒரு அரசியல் கலாசாரம் வேண்டும் என்ற அர்ப்பணிப்போடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் அதன் சிறப்பான தலைமை மூலம் ஸ்தீரமான வளர்சிப்பாதையில் அந்த கட்சி சென்றதாகவும் அதன் ஸ்தாபக தலைவரான பெருந்தலைவரின் ஊணுறக்கமற்ற சேவை எப்போதும் மறையாதது எனவும் இந்த நிந்தவூர் மாவட்ட தொழிற்ப்பயிற்ச்சி அதிகார சபை பெருந்தலைவரின் முயற்ச்சியாலேயே உருவானதெனவும் இன்னும் கிழக்கில் காணப்படுகின்ற ஏனைய தொழிற்ப்பயிற்ச்சி நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என்பன அவர் விதைத்த விதைகள் எனவும் அவர் தெரிவித்தார்.    

இங்கு மறைந்த தலைவருக்கு சமர்ப்பணமாய் ஒரு ஆத்மாவின் குமுறல் என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மூத்தபோராளியும் கவிஞருமான யூ.எல். ஹஸனார் சக்காப் அவர்களினால் விஷேட கவிதை ஒன்றும் இயற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -