ஹிஸ்புல்லாஹ்வுக்கு அமைச்சு - காத்தான்குடியில் கொண்டாட்டம்

பழுலுல்லாஹ் பர்ஹான்-

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டதையடுத்து அமைச்சரின் சொந்த ஊரான காத்தான்குடியில் அவரின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி களிப்பில் இன்று 9 புதன்கிழமை ஈடுபட்டனர்.

இதன் ஓர் அங்கமாக காத்தான்குடி முதலாம் குறிச்சி அபூ பக்கர் சித்தீக் வீதியில் மீள்குடியேற்ற புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களினால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் வீதியால் சென்ற பொது மக்களுக்கு இனிப்பு பண்டங்களும்,குடிபானங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு காத்தான்குடியில் சில இடங்களில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டதை கொண்டாடும் வகையில் பாட்டாசுகள் கொழுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் வெற்றி (பத்கன் முபீனா) மகத்தான வெற்றியாகும் காத்தான்குடி காழிநீதி பதி மௌலவி எஸ்.எம்.அலியார் தெரிவிப்பு

ஏ.எல்.டீன்பைரூஸ்-

புணர்வாழ்வு இராஜாங்;க அமைச்சராக இன்று சத்தியப்பிரமானம் செய்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் சத்தியப்பிரமாண நிகழ்வினை  அடுத்து காத்தான்குடி மெத்தை பெரிய ஜம்ஆ பள்ளிலாயலில் 09.09.2015 புதன்கிழமை அஸர் தொழுகையின் பின்னர் ஸலாத்துல் ஷூக்குர் தொழகை மற்றும் துஆ பிரார்த்தனை இடம் பெற்றது.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் சத்தியப்பிரமானம் தொடர்பாக மௌலவி அல்ஹாபிழ் எம்.சாஜஹான ;(பலாஹி) அவர்களினால் விசேட உரை நிகழ்தப்பட்டதுடன்  காத்தான்குடி காழிநீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார்(பலாஹி) அவர்களினால் விசேட துஆ பிரார்த்தனை இடம் பெற்றது.

மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு அப்பிழ் பழம், தோடம்பழம், ஈத்தம் பழம் என்பன வழங்கி ஆதரவாளர்கள் இறை இல்லத்தில் இபாதத்தின் மூலம் தங்கள் மகிழ்சிகளை தெரிவித்துக் கொண்டனர்.

மேற்படி நிகழ்வில் காத்தான்குடி சம்மேளன் பிரதி தலைவர் அப்துல் ஜவாத், அ;ஷ்ஷெய்ஹ் மும்தாஸ்(மதனி) காத்தான்குடி முன்னால் நகர முதல்வர் பிரதி நகர முதல்வர், முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் ,கல்வி மான்கள், உலமாக்கள் உட்பட பெருந்திரலான் பொதுமக்கள் கலந்து கொண்டதினை காணக் கூடியதாக இருந்தது

தனக்கு கிடைத்த அமைச்சு பதவி மற்றும் பள்ளிவாயல் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு  புணர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் விசேட செய்தி தொலை பேசி மூலமாக தெரிவிக்கப்பட்டது.


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காத்தான்குடி மத்திய குழுவின் ஏற்பாட்டில் காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் விஷேட துஆப் பிரார்த்தனை-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காத்தான்குடி மத்திய குழுவின் ஏற்பாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டதையடுத்து காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் மீள்குடியேற்ற புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் ,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் நல்லாசி வேண்டி விஷேட துஆப் பிரார்த்தனை இன்று 9 புதன்கிழமை இடம்பெற்றது.

இதன் போது மேற்படி விஷேட துஆப் பிரார்த்தனையை காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளரும்,காழி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) நடாத்தி வைத்தார்.

காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இவ் விஷேட துஆப் பிரார்த்தனையில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் , ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி), கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட், உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காத்தான்குடி மத்திய குழு உறுப்பினர்கள், உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள்,கல்வியலாளர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -