இலங்கை போக்குவரத்துச் சபை அக்கரைப்பற்றுச் சாலையில் 2015.09.09ம் திகதி அக்கரைப்பற்றுச் சாலை, பொத்துவில் சாலைகளில் கடமையாற்று ஊழியர்களுக்கு அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்து பொலிஸ் பிரிவினரால் வீதி விபத்து தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ்வீதி விபத்து விழிப்புணர்வு கருத்தரங்கு கிழக்கு பிராந்திய போக்குவரத்துச் சபையின் பிரதான பிராந்திய முகாமையாளர் ஏ.எல். சித்தீக் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இன்நிகழ்வில் பிராந்திய செயலாற்று முகாமையாளர், அக்கரைப்பற்றுச்சாலை முகாமையாளர், உதவி முகாமையாளர்கள், பொத்துவில்சாலை பொறுப்பதிகாரி, மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

