பாராளுமன்றத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் எதிர்க்கட்சி தலைவர் பதவி சம்மந்தனுக்கு வழங்கியமை குறித்து, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய விமல் வீரவன்ச, எதிர்க்கட்சி தலைவர் பதவியினை குமார வெல்கம விற்கு வழங்குவது தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் போது சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சி தலைவர் பதவியினை சம்மந்தனுக்கு வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியானவுடன் பாராளுமன்றத்தில் சிறிது நேரம் பதட்டமான சூழல் நிலவியுள்ளது.
சபாநாயகரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடியாத அளவிற்கு பதட்டம் நிலவியுள்ளது.
