1951 ம் ஆண்டு செப்டம்பர் 3ம் திகதி கம்பஹா யோகடவில் பிறந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இன்று தனது 64 வது பிறந்த தினத்தினை கொண்டாடுகிறார். இவர் 1967 ம் ஆண்டு பொலநறுவை மாவட்ட, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் லீக் ல் சேர்ந்தார். 1971ல் இடம்பெற்ற ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் 2015 ம் ஆண்டு ஜனவரி 8 ம் திகதி இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இலங்கை அரசியல் வரலாற்றில், ஜனநாயகத்தினை ஏற்படுத்துவும், சர்வ இன மக்களும் தேசிய நல்லிணக்கத்துடன் வாழ வழியமைக்கக் கூடிய ஆட்சியினை முன்னெடுத்து வருவதில் இது வரையில் இவர் வெற்றி கண்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு இம்போட் மிரர் ஊடகவலையமைப்பு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
