ஹரீஸின் 20இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட நவீன நுழைவாயில் திறப்பு -படங்கள்


எஸ்.அஷ்ரப்கான்-

ல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட நுழைவாயில் திறப்பு விழா (28) திங்கட் கிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு கல்லூரியின் முதல்வர் அருட் தந்தை பிறைனர் செல்லர் தலைமையில்இடம் பெற்றது.

கல்லூரியின் பழைய மாணவனும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் 20இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட நவீன நுழைவாயிலை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் விசேட அதிதியாகவும், கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் கௌரவ அதிதியாகவும், கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன் சிறப்புஅதிதிகளாகவும் முன்னாள் கல்லூரி முதல்வர் அருட் சகோதரர் ஸ்டீவன் மத்தியு ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -