பி. முஹாஜிரீன்-
அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி. கஸ்ஸாலி தலைமையில் அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இக்கோட்டத்திலுள்ள சகல பாடசாலைகளும் பங்குபற்றின.
காலை 9 மணி முதல் மாலை 5.30 மணிவரை நடைபெற்ற இவ் சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வுக்கு அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேஹ் ஏ.எல்.எம். காஸிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
ஓவ்வொரு பாடசாலைகளிலிருந்தும் தரம் 3, தரம் 4, தரம் 5 ஆகிய வகுப்புக்களில் கல்வி கற்கும் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு கலப்பு ஓட்டம், தாம்பு தாண்டல் ஓட்டம், தாங்கு திறன் ஓட்டம், கோலூன்றிப் பாய்தல், வேகமாகத் தடை தாண்டல், முழங்காலில் முன்னோக்கி எறிதல், பின்னால் பந்து எறிதல், ஈட்டி எறிதல் போன்ற பல புதுவகையான போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் இறுதியில் பங்குபற்றிய சகல மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் ஒவ்வொரு பிரிவு வகுப்புக்களிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பாடசாலைகளுக்கு வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் தரம் 3 இல், ஒலுவில் ஜாயிஸா மகளிர் வித்தியாலயம் 1ம் இடத்தையும் பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயம் 2ம் இடத்தையும் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் 3ம் இடத்தையும் தரம் 4 இல், ப அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் 1ம் இடத்தையும் பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயம் 2ம் இடத்தையும் ஒலுவில் ஜாயிஸா மகளிர் வித்தியாலயம் 3ம் இடத்தையும் தரம் 5ல், அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயம் 1ம் இடத்தையும் பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயம் 2ம் இடத்தையும் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை 3ம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
இவ்விழாவில் அரம்ப பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. அபுதாஹிர், அக்கரைப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல். இக்பால், ஆரம்பநெறி ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல். மன்சூர், அக்கரைப்பற்று வலய சிறுவர் மெய்வல்லுனர் பிரிவு இணைப்பாளர் ஏ.எல்.எம். பாயிஸ், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் எம்.ஏ. ஹம்மாத் உட்பட படசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.




