பைஷல் இஸ்மாயில், ஏ.எல்.எம்.நபார்டீன் -
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் 15வது நினைவு தினத்தை முன்னிட்டு கத்தமுல் குர்ஆன் தமாமும், விஷேட துஆப் பிரார்த்தனையும் இன்று (16) புதன்கிழமை மாலை அட்டாளைச்சேனை மசூர் சின்னலெப்பை சந்தை சதுக்கத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுத் தலைவரும், அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம பேச்சாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், கல்முனை மாநகர சபையின் பிரதி மேயருமான முஸ்லிம் முழக்கம் ஏ.எல்.அப்துல் மஜீட் கலந்துகொண்டு பிரதம உரை நிகழ்த்தினார்.
மேலும் இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் ஆலோசகருமான யூ.எம்.வாஹிட் மற்றும் உயர்பீட உறுப்பினர் எஸ்.எல்.எம்.பழீல் ஆகியோர் விஷேட உரையினை நிகழ்த்தினர்.
மேலும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஏ.எஸ்.எம்.உவைஸ், ஐ.எல்.முனாப், எம்.எல்.கலீல், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா, உதவிச் செயலாளர் ஜே.அதிசயராஜ், மத்திய குழுவின் செயலாளர் எம்.ஏ.சீ.ஹாரீத், பொருளாளர் ஏ.எல்.ஏ.பத்தாஹ், ஆலோசகர் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர், மற்றும் உலமாக்களும், கல்விமான்களும், கட்சிப் போராளிகளும் கலந்துகொண்டு கத்தமுல் குர்ஆன் தமாமும், விஷேட துஆப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.











