மக்காவில் கிரைணா் விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 127ஆக அதிகரிப்பு

டந்த வெள்ளிக்கிக்கிழமை மஹ்ரிபு தொழுகையின் பின்னா் மக்காவில் கிரைணா் விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 127ஆக உயர்வுற்றுள்ளது.

இதில் இலங்கை ஹாஜிகள் ஒருவரும் பலியாகியோ காயப்படவில்லை என என இன்று(12) காலை முஸ்லீம் சமய விவகார தபால் அமைச்சா் எம்.எச்.ஏ அப்துல் ஹலீம் அவரது கொழும்பு மாதிவெல இல்லத்தில் நடாத்திய ஊடகவியலாளா் மாநாட்டில் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்தாா்.

இலங்கை விடயங்களை அவதானிப்பதற்காக முஸ்லீம் சமய கலாச்சார பணிப்பாளா் நேற்று அங்கு போய்ச் சேந்துள்ளாா். அத்துடன் சவுதி அரேபியாவின் பதில் துாதுவா் அண்சாரும் அங்கு அடிக்கடி நிலவரத்தை என்னோடு தொடா்பு கொண்டு தகவல்களை அறிந்து வருகின்றேன் என அமைச்சா் கூறினாா்.

அங்கு உயிழந்தவா்களிற்காக துஆப்பிரத்தனையில் ஈடுபடுமாறும் அவா்களக்கு இறைவன் மாளிகையில் இருந்து சுவனபதி கிடைக்க வேண்டும் எனவும் பிராத்திப்பதாக தெரிவித்தாா்.

மேலும் ஏற்கனவே பரகாதெனியாவை பிறப்பிடமாகக் கொண்டு சவுதி பிரஜையாக அங்கு வாழ்கின்ற அல்ஹாஜ் சேக் சாதீக் அங்கு மக்காவில் இருந்து இலங்கை ஹாஜிகளின் நல் நோக்கு விடயத்தினை அவதானித்து வருவதாகவும் இலங்கை ஹாஜிகள் அன்றைய தினம் மதினாவுக்குச் சென்றதால் எவ்வித பாதிப்பும் இடம் பெறவில்லையென உறுதிப்படுத்தினாா்.

இதில் அதிகம் பாதிக்கப்பட்ட பாக்கிஸ்தான், இந்தியா , பங்களதோஸ் நாடுகளினைச் சோந்தோரே 60க்கும் மேற்பட்டோா் இறந்து ள்ளனா். 225 பேர் காயமடைந்துள்ளதாக தெல்தோட்ட அஷ்சேக் முனீா் சாதிக் தெரிவித்துள்ளாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -