கிழக்கு மாகாண வான் ­பரப்பில் விமா­னங்கள் பறப்பதனால் மக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை!

அ.றஹ்மான்-

திர்­வரும் மூன்றாம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள நீர்க்­காகம் இரா­ணு­வக்­கூட்டுப் பயிற்­சியின் போது கிழக்கு மாகாண வான் ­பரப்பில் விமா­னங்கள் பறக்­கக்­கூடும் என்றும் இதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவை­யில்லை எனவும் இலங்கை இரா­ணு­வத்தின் பிர­தான அதி­காரி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தெரி­வித்தார்.

செப்­டெம்பர் 03 ஆம் திகதி நீர்க்­காகம் கூட்­டுப்­ப­யிற்சி ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இலங்கை இரா­ணு­வத்தின் ஏற்­பாட்டில் 06 ஆவது தட­வை­யாக முப்­ப­டை­யினர் இணைந்து நடத்தும் இப்­ப­யிற்­சி­யா­னது இம்­முறை கொக்­கிளாய் தொடக்கம் யாழ்ப்­பாணம் வரை நடை­பெ­ற­வுள்­ளது.

பயிற்சி நடக்­க­வுள்ள பிர­தே­சங்­களில் விமா­னங்கள் பறப்­ப­தை­யிட்டு மக்கள் அச்­ச­ம­டையத் தேவை­யில்­லை­யென்றும் இதனால் மக்­களின் அன்­றாட நட­வ­டிக்­கையில் எவ்­வித பாதிப்பும் ஏற்­ப­டப்­போ­வ­தில்­லை­யென்றும் அவர் மேலும் தெரி­வித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -