பாக்கிஸ்தான் நாட்டு இலங்கைக்கான தூதுவலராயத்தின் அனுசரணையுடன் கணனி பயிற்சி

இக்பால் அலி-

மது எதிர்கால சந்ததிகளான குழந்தைச் செல்வங்களின் நல்வாழ்வும் நல மேம்பாடுமே நமது முக்கயமான நாட்டமாகவும் இலட்சியமாக இருக்க வேண்டும் என இலங்கைக்கான பாகிஸ்தான் நாட்டுத்
தூதுவர் மேஜர் ஜெனரல் செய்யத் சாக்கீல் உஸைன் தெரிவித்தார்.
கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கம் மற்றும் மத்திய மாகாண முஸ்லிம் லீக் அமைப்பின் ஏற்பாட்டில்
பாக்கிஸ்தான் நாட்டு இலங்கைக்கான தூதுவலராயத்தின் அனுசரணையுடன் கணனி பயிற்சியை நெறியை

நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கணனிகள் வழங்கும் நிகழ்வும்

இன்று கண்டி ஜின்னா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம

அதிதியாகக் கலந்து கொண்ட பாக்கிஸ்தான் நாட்டு தூதுவர் மேஜர் ஜெனரல் செய்யத் சாக்கில் உஸைன் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்

வெளிவாரி வளங்களை பெரிதும் நம்பி இருக்காமல் பல மாடிக்க கட்டிடங்கள் போன்றவற்றை விஸ்தரிப்பது பற்றி சிந்திக்காமல் இருக்கின்ற வளங்களைக் கொண்டு மிக உயர்ந்த பலன்களைப் பெறுவதற்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்பதே அனைவருடைய நோக்கமாகும். உங்களுடைய
எதிர்கால சந்ததிளைப் பற்றியே நாம் அதிகம் சிந்தித்து அதற்காகவே செயலாற்ற வேண்டும்.
நீங்கள் கோருவதெல்லாம் தருகிறேன் என்று வாக்குறுதியளிக்க நான் தயாராக இல்லை. ஏனெனில் நடைமுறைச் சாத்தியத்திற்கு ஒத்துவராததை உறுதியளிப்பதில் பயனில்லை.இங்கு பயிற்சி பெறுகின்ற மாணவர்களின் ஆற்றலும் ஆர்வமும், திறமையும்

பாராட்டத்தக்கதாகவும் பெருமகிழ்ச்சிக்குரியது ஆகும்.
இந்த மத்திய பயிற்சி நிலையத்தை முன்னெடுத்துச் செல்வதில் கண்டி மஸ்லிம் வர்த்தக சங்கமும். மத்திய மாகாண முஸ்லிம் லீக்கும் அளப்பரிய சேவையை ஆற்றி வருகின்றது. அது மென்மேலும் தொடரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார். கணனி பயிற்சி நெறியை முடித்த மாணவர் மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. சான்றிதழ்களை பாக்கிஸ்தான் நாட்டுத் தூதுவர் அவரது பாரியார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வழங்கி வைத்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -