மக்ஸூத் முஹம்மட் றம்சான்-
உரிமை மீறப்பட்டமையும் நிதி மோசடியும் அப்துல் ஹமீது பாத்திமா றொஸ்னா எனும் மாணவி இம்முறை பொத்துவில் அல் இர்பான் வித்தியாலயத்தில் விஞ்ஞான பீரிவில் கற்றதோடு பரீட்சார்த்தியாக விண்ணப்பித்து விண்ணப்பமும் கிடைத்தது ஆனால் அதிபரின் தான் தோன்றிச்செயற்பட்டால் இம் மாணவி இம்முறை பரீட்சை எழுதாமல் தடுக்கப்பட்டு இருக்கின்றார்.
அத்தோடு வரவு குறைந்த இன்னொரு மாணவி கொழும்பில் தனியார் கல்வி நிலையங்களில் கற்றுக்கொண்டு பொத்துவில் அல் இர்பான் வித்தியாலத்திலே பரீட்சை எழுத அனுமதித்த இப்பாடசாலை அதிபர் ஏழை மாணவியின் கல்வியில் கை வைத்ததன் பின்ன என்ன வென அறியத்தரவேண்டும். குறிப்பிட்ட இந்த செய்தியோடு இனைக்கப்பட்டு இருக்கும் உரிய மாணவியின் ஒப்பம் அடங்கிய கடிதம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சருக்கு மத்திய கல்வி அமைச்சுக்கும் அனுப்பப்பட்டு இருக்கின்றது.
ஏழை மாணவிகளின் கல்வியோடுவிளையாடும் இவ்வாறன அதிபர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினரும் பொது மக்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

