ஜனாதிபதி காத்தான்குடியில் நல்லாட்சியின் செயற்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் - றம்ழான் வேண்டுகோள்

ஜனாதிபதி அவர்கள் காத்தான்குடியில் நல்லாட்சியின் செயற்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் என முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் NK றம்ழான் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அவரது வேண்டுகோளில், கடந்த பல வருடங்களாக நாட்டில் ஏற்பட்டிருந்த ஊழல் மோசடி மற்றும் கொலை கொள்ளை ஆட்கடத்தல் அரசியல் பழிவாங்கள் போதைப்பொருள்களுடன் தொடர்பு போன்ற இன்னும் பல விரும்பத்தகாத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த மக்கள் ஒன்றுபட்டு ஜனவரி 8ம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்குமாறு விடுத்த வேண்டுகோலை ஏற்று மக்கள் முழுமையாக வாக்களித்தனர். 

அதன் மூலம் ஜனாதிபதி அவர்கள் வெற்றி பெற்று நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தினீர்கள் நாட்டில் நல்லாட்சியை மலர வேண்டும் என்பதில் மிகவும் அர்ப்பனிப்போடு செயற்பட்வர்களில் காத்தான்குடி மக்களின் பங்களிப்பு மிகக்காத்திரமானது என்பதை ஜனாதிபதி அவர்கள் மறந்திருக்க முடியாது

அவ்வாறு பல்வேறு கழுத்தறுப்பு குழிபறிப்புகளுக்கு மத்தியில் போராடிப் பெற்றெடுத்த நல்லாட்சியை தொடர்ந்தும் பாதுகாப்பதற்கு முன்னால் ஜனாதிபதி மைந்த ராஜபக்ஷவும் அவரது சகாக்களும் பாரிய தடைகளையும் இடையூறுகளையும் சதிகளையும் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வந்த போது தன்னிடம் மக்களால் ஓப்படைக்கப்பட்ட நல்லாட்சியை பாதுகாத்து மீண்டும் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

 என்ற ஒரு உன்னதமான நோக்கோடு உடனடியாக பாரளமன்றத்தை களைத்து மீண்டும் எதிர்வரும் புதிய பாராளமன்றத்திற்கு ஊழல் மோசடி போதைப்பொருள்களோடு தொடர்பு இல்லாத கன்னியமான மக்கள் நலன் சார்ந்து செயற்படும் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யுமாறும் நல்லாட்சிக்கும் தனது வெற்றிக்கும் வாக்களித்தவர்களை வெற்றிபெறச் செய்யுமாறு வேண்டுகோல் விடுத்தீர்கள். 

அதனை ஏற்று கடந்த காலத்தில் நல்லாட்சியை விரும்பாத ஊழல் மோசடிக்காரர்களை நடந்து முடிந்த பாராளமன்றத்தேர்தலில் தேற்கடித்து நல்லாட்சிக்கும் உங்களது வெற்றிக்கும் பங்களிப்புச் செய்தவர்களை வெற்றிபெறச் செய்தோம் ஆனால் நீங்கள் மக்களால் தோற்கடிக்கப்பட்வர்களை மீண்டும் தேசியப்பட்டியல் மூலம் காத்தான்குடிக்கு நியமித்து கடந்த காலத்தில் நல்லாட்சிக்கு ஆதரவு வழங்கியவர்களின் பள்ளிவாயல்களையும் வர்த்தக நிலையங்களையும் வீடுகளையும் தாக்கி உடமைகளை சேதப்படுத்தி கர்ப்பினித்தாயையும் இன்னும் பலரையும் உயிர் ஆபத்துக்குள்ளாகும் வரையும் தாக்குதல் நடாத்தி அவர்கள் மூலம் நல்லாட்சியை மீண்டும் குழி தோன்றிப் புதைத்து விட்டீர்கள் இதனை ஜனநாயகத்தை விரும்பும் எவரும் அங்கிகரிக்க மாட்டார்கள் 

இது புதிய பாராளமன்ற அமர்வுக்கு முன் நல்லாட்சிக்கு அடிக்கப்பட்ட ஒரு சாவுமணியாகும் நல்லாட்சியே தனது இலக்கு என அயராது உழைக்கும் உங்களது கட்சியில் நீங்கள் வழங்கிய தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவமே காத்தான்குடியில் காடைத்தனம் புறிவதற்கு வழிகோலியுள்ளது அதற்கான முழுப்பொறுப்பையும் ஜனாதிபதியே ஏற்றாக வேண்டும் இச்செயற்பாட்டினை எந்தவொரு ஜனநாயகவாதிகளாளும் ஏற்றுக்கொள்ள முடியாது.

உங்களது கட்சி பாராளமன்ற பிரதிநிதியை நல்லாட்சியின் செயற்பாட்டிக்குள் கொண்டுவர முடியாது போனால் எவ்வாறு ஏனைய கட்சி பாராளமன்ற பிரதிநிதிகளிடம் நல்லாட்சிக்கான ஆதரவினை பெற்றுக் கொள்ள முடியும் எனவே காத்தான்குடியில் நல்லாட்சியை நிலைநாட்ட ஏனைய ஜனநாயகத்தை விரும்பும் அரசியற் கட்சிகளும் தனது கட்சியின் செயற்பாட்டை நல்லாட்சியை நோக்கியதாக செயற்படுத்த ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோல் விடுத்தார் 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -