க.கிஷாந்தன்-
கந்தகெட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுங்காயங்களுடன் பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது….
கண்டியிலிருந்து பதுளை நோக்கி சென்ற பஸ்சும் பதுளை பகுதியிலிருந்து கந்தகெட்டிய நோக்கி சென்ற காரும் பதுளை கந்தகெட்டிய பகுதியில் வைத்து நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து 21.07.2015 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். பஸ் சாரதியை கைது செய்துள்ளதாகவும் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கந்தகெட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
